பருவதமலை கிரிவலம் எவ்வளவு தொலைவு? அதன் சிறப்புகள் | Mr Paruvathamalai

பருவதமலை கிரிவலம் அதன் சிறப்புகள்:

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்மாதிமங்கலம் அருகில் உள்ள பர்வதமலை பற்றி நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த பருவத மலையினை ஏறி நிறைய நபர்கள் மிகவும் பர்வத மலையின் அழகினையும் பருவத மலையின் மேல் உள்ள சுவாமி தரிசனத்தையும் பெற்றிருப்பீர்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு மலைகள் அண்ணாமலை மற்றும் பருவதமலை. இந்த மலைகளில் அண்ணாமலையை தான் அதிகமாக பக்தர்கள் கிரிவலமாக சுற்றி வருவார்கள். அதுபோல நமது பருவதமலையினை கிரிவலம் சுற்றி வருவது மிகவும் குறைவுதான். இருந்த போதிலும் அண்ணாமலையின் கிரிவலப் பாதை தூரம் 14 கிலோமீட்டர் மட்டுமே; ஆனால் பருவதமலையின் கிரிவலப் பாதை தூரம் கிட்டத்தட்ட 27 கிலோமீட்டர். அதாவது அண்ணாமலையை விட பருவதமலை இரண்டு மடங்கு மிகப்பெரிய கிரிவலப் பாதையை கொண்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள வெறும் 14 கிலோமீட்டர் தூரமே உடைய அண்ணாமலையை கிரிவலம் சுற்றி வருவதற்கே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகலாம்; அப்படி இருக்கும்போது 27 கிலோமீட்டர் தூரம் உடைய பருவதமலையை கிரிவலம் சுற்றி வர ஆறு மணி நேரத்தில் இருந்து எட்டு மணி நேரம் வரை கூட ஆகலாம். 

திருவண்ணாமலை அண்ணாமலையின் கிரிவலத்தை சுற்றி வருவதற்கு பக்தர்களுக்கு ஏற்ற வசதிகள் அனைத்தும் கிரிவலப் பாதையில் இருக்கும். அவர்களுக்கு தேவையான கடைகள், கழிப்பறைகள், இலவச சிறப்பு அன்னதானங்கள் அனைத்தும் தினந்தோறும் திருவண்ணாமலை கிரிவலத்தில் வழங்கப்படுவதால் பக்தர்களுக்கு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் எளிதாக கிரிவலத்தை சுற்றி வந்துவிடுவதனாலும், சுற்றிவரும் நேரம் குறைவாக இருப்பதினாலும் அண்ணாமலை கிரிவலத்தையே பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் தினந்தோறும் சுற்றி வர விரும்புவார்கள்.

ஆனால் பருவதமலை கிரிவலம் நீண்ட தொலைவு, பல கிராமங்களை தாண்டி காட்டுப் பாதைகளில் செல்ல வேண்டும் என்ற காரணத்தினாலும், போதிய கழிப்பறை வசதிகள், கடைகள், சிறப்பு அன்னதானம் அதிகம் இல்லாத காரணத்தினாலும் தினந்தோறும் பர்வதமலை கிரிவலத்தை பக்தர்கள் சுற்றி வருவதில்லை.

திருவண்ணாமலையில் கிரிவலத்தின் போது உடல் உபாதைகள் ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவும் அல்லது மலம் கழிக்கவும் கழிப்பறைகள் உள்ளத்துக்குக் காரணம் அது நகரம் ஆதலால் வெட்டவெளியில் செல்ல முடியாது என்கிற காரணத்தினால் நாகரிகத்துக்காக பல கழிப்பறைகள் இருக்கிறது. கடைகள் இருக்கிறது. 

ஆனால் பருவதமலை கிரிவலம் முழுக்கவே கிராமங்களாக நிறைந்துள்ளது. ஆதலால் வெட்ட வெளியில் தான் தான் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ முடியும். கிராமம் ஆதலால் கடைகளும் அதிகம் இருக்காது. அதனால தினத்தோறும் பருவதமலை கிரிவலத்தை சுற்ற பக்தர்கள் வருவதில்லை. இருந்த போதிலும் வருடம் மார்கழி ஒன்றாம் தேதி பர்வதமலை கிரிவலத்தை சுற்றிவர பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

ஆனால் பருவதமலை கிரிவலமும் சுற்றி அதன் அனுபவத்தையும் நீங்கள் பெறலாம். வருடா வருடம் மார்கழி ஒன்றாம் தேதி பருவதமலை பக்தர்கள் கிரிவலமாக சுற்றி வருவார்கள். பருவத மலையை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கால் வலிக்கும் கிரிவலம் சுற்றி வருவார்கள். நீங்கள் மார்கழி ஒன்று அன்று  பருவதமலை கிரிவலம் வந்தால் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது ஐதீகம்.

 நீங்கள் மார்கழி ஒன்று என்று இந்த மலையினை கிரிவலம் சுற்றலாம் நீங்கள் இந்த மழையினை சுற்றும் பொழுது எங்கிருந்து ஆரம்பிக்கிறீர்களோ அங்கிருந்தே மழையை சுற்றி வந்து மீண்டும் அங்கேயே முடிக்க வேண்டும் நீங்கள் இந்த தினத்தன்று பருவத மலையை கிரிவலம் சுற்றும் பொழுது மலையை சுற்றி உங்களுக்கு தேவையான உணவு நீர் மோர் என நிறைய உணவுகள் பக்தர்களுக்காக மலையை சுற்றி வழங்கப்படுகிறது.

மேலும் நீங்கள் இந்த மலையை சுற்றும் பொழுது சுற்றியுள்ள கோயில்கள் மற்றும் அங்குள்ள சாமிகளை தரிசனம் செய்து இந்த மலையினை சுற்றலாம். மேலும் மலையினைச் சுற்றும் பொழுது மலையின் அழகினையும் இயற்கையின் அழகையும் நீங்கள் ரசித்து இந்த மலையை கிரிவலம் சுற்ற ஆரம்பிக்கலாம்.

பர்வத மலையின் அழகானது தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மிகவும் உதய கூட்டமாக இருக்கும். நீங்கள் மலையை சுற்றி வரும்போது இதனை தெளிவாக காணலாம். பருவத மலையினை கிரிவலம் சுற்றும்பொழுது மலையினை சுற்றி உள்ள கிராமங்கள் மற்றும் அங்குள்ள நபர்கள் உங்களுக்கு தேவையான உணவினை வழங்கி வருகின்றனர். நீங்களும் ஒரு தடவை இந்த மலையினை மார்கழி ஒன்று என்று கிரிவலம் செய்யலாம் இது மிகவும் உங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த அனுபவமாக அமையும்.

Post a Comment

Previous Post Next Post