பருவதமலையில் கஞ்சா எடுத்து சென்ற இளைஞர் கைது! Mr Paruvathamalai

 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தில் உட்பட்ட தென் மகா தேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது 4560 அடி உயரம் உள்ள பருவதமலை. இல்ல பர்வதமலைக்கு நாள் தூரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த பௌர்ணமி அன்று மலைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா, அபின், சிகரெட் மற்றும் பிற போதைப் பொருள்களை மறைத்து கொண்டு சென்றது வனத்துறை காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இளைஞன் வடநாட்டு இளைஞர் போல் இருப்பதால் காவல்துறையினர் கூறுவதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இந்த தவறான செயலியை ஈடுபட்ட அந்த இளைஞரின் கைது செய்து கடலாடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் காவலர்கள் கண்டுபிடித்து வடநாட்டு இளைஞர் பிடிப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறோம் ஆனால் காவலர்களால் பிடிப்படாமல் எத்தனை பேர் பர்வத மலைக்கு இதுவரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு சென்று இருக்கலாம் என்பது வெளிவராத தகவல்களாக இருக்கின்றன..

காவல்துறை கண்காணிப்பு கடந்த ஒரு வருடங்களாக மட்டும் தான் அதிகமாக இருக்கிறது அதற்கு முன்பு 24 மணி நேரமும் பருவத மலைக்கு சென்று வரலாம் எப்போது வேண்டுமானாலும் மலை மீது ஏறி இறங்கலாம் என்கிற நிலை இருந்தபோது என்னென்ன அட்டூழியங்கள் நடந்திருக்கும் என்பதே மக்கள் உணரலாம். 

அப்போதுதான் இந்த கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை நிறைய காவி உடை அணிந்த சாமியார்கள், சிவன் அடியார்களுக்கு கூறிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் பல அகோரிகள் உள்ளிட்டோர் பருவத மலைக்கு கொண்டு சென்று அங்கு இந்த போதைப் பொருளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை வெளிக்கத்திற்கு வராத உண்மை.

அதற்கு பிறகுதான் இந்த நடவடிக்கைகளை குறைக்க வனத்துறை காவலர்கள் பருவதமலைக்கு மேல் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்தார்கள். அதன்படி தற்போது காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மலை ஏற மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனாலும் தற்போது வரை கூலிப் என்று அழைக்கப்படக்கூடிய வாய்க்கு குளிர்ச்சி அளிக்க கூடிய போதையும்  அளிக்கக்கூடிய போதை பொருளை பல்வேறு விதமாக பருவதமலைக்கு கொண்டு செல்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஏனென்றால் பருவதமலைக்கு செல்லும் வழியில் படிக்கட்டுகளில் அந்த கூலிப் என்கிற போதை பொருளின் எச்சங்கள் தெரிகிறது. 

இதை கண்டிப்பாக காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்து அனுப்ப வேண்டும் இல்லையென்றால் மலைக்கு ஆன்மீக பயணமாக செல்லும் பக்தர்கள் தர்ம சங்கடத்திற்கு உள்ளார்கள். மேலும் இவர்களை பார்த்து பல்வேறு இளைஞர்கள் குழந்தைகள் கெட்டுப் போவதற்கு வழியாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post