மேற்கு தொடர்ச்சி மலை தொடர்-"இந்தியாவின் பசுமை வளத்தின் நெஞ்சு"
இந்தியாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் என்பது இந்தியாவின் பசுமை வளம் பருவ மழை மற்றும் புவியியல் பல்வேறு வகையான உயிரினங்களின் வாழ்விடம் என பல்வேறு வகைகளில் கூறலாம். இந்த மேற்கு தொடர்ச்சி மலையானது தமிழ்நாட்டின் இயற்கை வளங்களின் அழகாகவும் மற்றும் இந்தியாவின் உலக பாரம்பரிய சின்னமாகவும் இந்த மேற்கு தொடர்ச்சி மலையானது இருந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை பற்றிய ஒரு அறிமுகம்:
- இந்த மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத் மாநிலம் முதல் கன்னியாகுமரி மாநிலம் வரை சுமார் 6 மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட மலைத்தொடராக இருக்கிறது.
- இந்த மாவட்டங்களில் தமிழ்நாடு இருக்கின்றன. இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன.
- மேற்கு தொடர்ச்சி மலையின் நீளமானது சுமார் 1600 கிலோமீட்டர் தூரம் மேற்கு தெற்கு திசையில் இந்த மலைத்தொடர் ஆனது அமைந்துள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமுடி சிகரம் ஆனது தென்னிந்தியாவில் உயரமான சிகரமாக இருக்கிறது. இதனுடைய உயரம் சுமார் 2695 மீட்டர் ஆகும்.
- தென்மேற்கு பருவக்காற்று ஆனது அதிக மழை உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பருவக்காற்றை தடுக்கும் பொழுது மேகங்கள் உருவாகி அதிகளவு மழையானது உருவாகின்றது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள யுனெஸ்கோ உலகில் உள்ள 8 பல் உயிர் வளங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
- இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
- இதில் ஏறக்குறைய 139 பாலூட்டி வகை உயிரினங்கள் மற்றும் 508 பறவை வகைகள் 176 இரு வாழ்விகள் இருக்கின்றன. மேலும் இந்த வலையில் 5000க்கும் மேற்பட்ட சவர் வகைகள் இருக்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள்:
- குஜராத்
- மகாராஷ்டிரா
- கோவா
- கர்நாடகா
- கேரளா
- தமிழ்நாடு
- போன்ற மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை நெருங்கி இருக்கின்றது.
- மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை பழனி மலை,நீலகிரி மலைத்தொடர், அகத்தியர் மலை,பாபநாசம்,மகேந்திரகிரி பொதிகை மலை போன்ற மலைத்தொடர்கள் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளாக இருக்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையின் பருவ மழையை பற்றிய விளக்கம்:
- மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரானது அரபிக்கடலில் இருந்து வரும் காற்றை தடுத்து மேகங்கள் உருவாகின்றன. இதன் மூலமாக மேற்குப் பக்கத்தில் உள்ள பகுதிகளில் அதிக அளவு மழையை ஏற்படுத்துகின்றன.
- இதன் மூலமாக வால்பாறை கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக அளவு மழையை கொடுக்கிறது.
- மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தக்கான பீடபூமி பகுதிக்கு மழை குறைவாகவே இருக்கின்றன.
- மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்கள்:
- தாவர வகைகள்-இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் 5000 மேற்பட்ட தாவர வகைகள் தனிச் சறப்புகளைக் கொண்டு இருக்கின்றன.
- விலங்குகள்-சுமார் 139 வகை பாலூட்டி உயிரினங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமாக இந்திய யானை புலி நரி போன்றவை முக்கிய இடமாக இருக்கின்றன.
- பறவை வகைகள்- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 508 பறவை வகைகள் இருக்கின்றன இதில் பெரும்பாலானவை நீர் பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகும்.
- இரு வாழ்விகள்-இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 176 வகை இரு வாழ்விகள் இருக்கின்றன. இதில் முக்கியமானவைகள் தவளைகள் மற்றும் நத்தைகள்.
சுற்றுலா இடங்கள் மற்றும் கலாச்சார இடங்கள்:
- சபரிமலை பழனி மலை மற்றும் அகஸ்திய மலை போன்ற மலைகள் சிறந்த கலாச்சார இடமாக இருந்து வருகின்றன. மேலும் இந்த சபரிமலைக்கு ஆண்டுதோறும் பல்வேறு வகையான பக்தர்கள் ஆன்மீகத்திற்காக வந்து செல்கின்றனர்.
- மேலும் குற்றாலம் வால்பாறை மற்றும் உதகை மாவட்டத்தில் உள்ள இடங்கள் போன்றவை பசுமை வளங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கின்றன.
- வரலாற்று முக்கியத்துவம்: இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செனசோயிக் காலத்தில் அதாவது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் இருக்கின்றன.
- கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதியானது இந்தியா ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் போன்றவை நிறைந்திருந்த ஒரு காலமாக இந்த நிலப்பரப்பு இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலையின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம்:
புவியியல் மற்றும் பரிமாண வரலாறு:
கோண்டுவானா நிலப்பரப்பு:
- இந்த நிலப்பரப்பானது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையானது சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டுவனா என்ற ஒரு பகுதி ஆனது பிளவுபட்ட இப்போது உருவான ஒரு நிலப்பகுதியாகும்.
- இந்திய துணை கண்டம் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆகிய பகுதியிலிருந்து பிரிந்து ஆசிய பகுதியை நோக்கி நகர்ந்த போது இந்த மலையானது உருவானது. இதனாலேயே இந்த மலையானது இமயமலையை விட பழமையான மலை என கருதப்படுகிறது.
எரிமலை செயல்பாடுகள்:
100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிகழ்ந்த எரிமலை செயல்பாடுகள் தக்காண பீடபூமியின் உருவாக்கம் மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியை அதிக அளவு பாதித்தன. இதனாலையே இந்த பகுதியில் பல எரிமலை எச்சங்கள் என்றும் இப்பகுதியில் காணப்படுகின்றன.
மனிதனின் நாகரிகம் மற்றும் கலாச்சார வரலாறு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு ஆண்டுகளாக பழங்குடி மக்கள் தாயகமாக இந்த மலைத்தொடர் இருந்து வருகிறது. வேட்டையாடுபவர்கள் ஆரம்ப கால விவசாயிகள் மற்றும் உணவு சேகரிப்பவர்கள் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் இருக்கின்றன.
வர்த்தக பாதை:
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கணவாய்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக பாதைகளாக இருந்து வந்தன. பாலக்காடு கணவாய் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது.
பழங்கால இடங்கள்:
மேற்கு தொடர்ச்சி மலையில் பழங்கால கோயில்கள் குகைகள் மற்றும் கோட்டை பகுதிகளில் அமைந்துள்ளன. இவைகள் இப்பகுதியில் பலமான கலாச்சார வரலாறு மற்றும் அரசுகளின் ஆட்சியையும் குறிக்கின்றன.
பொருளாதாரம் மற்றும் சமூக வரலாறு:
முந்தைய காலத்தில் பிரிட்டிஷ் ஆட்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் வளமான மண் வளங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றை சரியாக பயன்படுத்தி தேயிலை காபி ரப்பர் மற்றும் பல்வேறு வகையான வாசனைப் பொருட்களை தோட்டப்பயிராக பயிரிட்டு அவர்களுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
நீர்வரத்து:
மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவின் பல நதிகளின் உருவாக்கத்திற்கு பிறப்பிடமாக இருக்கின்றன. காவேரி கோதாவரி மற்றும் கிருஷ்ணா போன்ற முக்கிய நதிகள் எங்கிருந்துதான் உருவாகின்றன. இந்த முக்கியமான ஆறுகள் பல்வேறு வகையான குடிமக்களின் வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
பாதுகாப்பு வரலாறு:
- மேற்கு தொடர்ச்சி மலைகள் உலகில் எட்டு முக்கிய பல்வேறு பெருக்கு மையங்களில் ஒன்றாக யுனெஸ்காவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மலையாகும். இந்த மலைப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் உலக அளவில் முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன.
- 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆனது காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக பல பாதுகாப்பு இயக்கங்கள் இருந்தன. குறிப்பாக "சைலன்ட் வேலி பாதுகாப்பு இயக்கம்" ஒரு முக்கிய அடையாளமாக இருந்து வந்தன.
- இந்த இயக்கங்கள் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு மற்றும் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றிய அவசியத்தை நிரூபித்தன.
சிறப்புரை:
மேற்கு தொடர்ச்சி மலைகள் என்பது இந்தியாவின் இயற்கை வளம், கலாச்சாரம், புவியியல், பசுமை வளம் போன்றவற்றின் அடையாளமாக இருந்து வருகிறது. எனவே இதனை பாதுகாப்பது நம்முடைய பொறுப்பாகவும்.
