வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட பருவதமலை மலையில் அமைந்துள்ள ஒரு மர்ம குகை கோவிலைப் பற்றி பார்க்க போகிறோம். இந்த பதிவு நிச்சயம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும். ஆதலால் தொடர்ந்து படியுங்கள்.
பருவதமலை திருவண்ணாமலை மாவட்டத்திலே அமைந்துள்ள மிக உயரமான மலையாக இருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4560 அடி உயரமுடையது. பொதுவாக மலைகளை அல்லது சிகரங்களை அளவிடுவதற்கு கடல் மட்டத்திலிருந்து தான் அளவெடுக்கிறார்கள். ஏனென்றால் கடல்தான் தரையின் கடைசி அடித்தளமாக பார்க்கப்படுகிறது. கடலுக்கு கீழே ஒரு உலகம் இருக்கிறது. அதன் ஆழம் யாரும் அளவிட முடியாது. அதனால்தான் கடல் மட்டத்திலிருந்து மலைகளையும் குன்றுகளையும் மலைத்தொடர்களையும் சிகரங்களையும் குறிக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் மூன்றாவது உயரமான மலைமேல் சிவ தலம் அமைந்துள்ள மலையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பருவதமலை திகழ்கிறது.
இந்த பருவதமலை மலை மேல் மல்லிகாஜூனர் பிரம்மராம்பிகை அம்மாள் ஆகிய தெய்வங்களின் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களை வந்து வழிபாட்டு செல்வதற்கும் இந்த மலைத்தொடர் ஏறுவதற்கு சுவாரசியமாகவும் ஒரு புது அனுபவத்தை தருவதனாலும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அந்த வகையில் இங்கு பல பேர் அறியாத பருவதமலைக்கு மேல் அமைந்துள்ள ஒரு குகை கோவில் எங்கு உள்ளது என்றால் பருவதமலை கிரிவலப் பாதை 27 km நிலமுடையது. சுமார் 5000 பரப்பளவில் அகலமாக பரந்து விரிந்துள்ள பர்வதமலை சுற்றி இருக்கின்ற கிரிவலப் பாதையை சுற்றி பல கிராமங்கள் அமைந்திருக்கிறது. அதில் கெங்கலமகாதேவி என்கிற கிராமத்தில் பால்கார் ராஜா என்பவரது வீட்டுக்கு அருகே உள்ள பருவதமலை காடு வழியாக உள்ளே என்றால் இந்த குகைக்கோவிலை வந்தடையலாம்.
இந்தக் குகை கோவிலுக்கு "ஆகாய கன்னியம்மன் ஆண்டவர் குகைக்கோவில்" என்ற பெயர் உண்டு. கெங்கலமகாதேவி கிராமத்திலிருந்து இந்த கோவிலுக்கு வழி கேட்டால் அனைவரும் சொல்வார்கள். எதற்காக இந்த குகை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது பலபேரது கேள்வியாக இருக்கும். இந்த குகை கோவிலின் சிறப்பு இந்த குகை கோவிலை கட்டியது ஒரே ஒரு சாமியார் என்பதும் அந்த சாமியார் இப்பொழுதும் அந்த குகை கோவிலில் வாழ்ந்து வருகிறார் என்பதால்தான். ஆதலால் அந்த சாமியாரை பார்ப்பதற்கும் அந்த அற்புத குகை கோவிலை பார்ப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் முதல் கொண்டு பக்தர்கள் அனைவரும் இந்த கோவிலுக்கு படையெடுக்கிறார்கள்.
ஆனால் நிறைய பேருக்கு இந்த கோவிலுக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் இருப்பீர்கள். இன்னும் பர்வத மலையில் இப்படி ஒரு கோவில் இருக்கிறதா என்பதை நான் சொல்லும் போது கேட்டு அதிர்ச்சியாகி இருப்பீர்கள்!
கெங்கலமகாதேவி கிராமத்திலிருந்து பால்கார் ராஜா வீட்டுக்கு நேராக செல்லும் காடு வழியாக உள்ளே சென்றால் ஒரு ஐந்து மீட்டர் தொலைவில் திரிசூல வேப்பமர மாரியம்மன் கோவில் என்கிற கோவில் உள்ளது. இந்த கோவில் வெட்ட வெளியில் வேப்ப மரத்தின் அடியில் அமைந்துள்ளதால் பல பேருக்கு இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாமல் இருக்கலாம். பார்ப்பதற்கு அம்மன் கையில் இருக்கும் திரிசூலம் வடிவில் இந்த வேப்பமரம் அமைந்துள்ளது. இந்த வேப்ப மரத்தின் அடியில் அமைந்துள்ள இந்த கோவிலை இங்கு உள்ள கிராமத்து பொதுமக்கள் ஒவ்வொரு அமாவாசை தோறும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த திரிசூலம் வேப்பமரம் மாரியம்மன் கோவிலை வழிபட்டு விட்டு நேராக செல்லும் காட்டு வழியில் சென்று கொண்டே இருந்தால் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் அங்கு ஆகாய கன்னியம்மன் ஆண்டவர் கோவில் செல்லும் வழி என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். என் பக்கத்திலேயே ஒரு திரிசூலம் நிறுவப்பட்டு அதில் வளையல்கள் தொங்கவடப்பட்டிருக்கும்.
அதை பார்த்த பிறகு அப்படியே நேர் எதிராக மேற்கு நோக்கி செல்லும் வழியில் நடந்த சென்றால் அங்கிருந்து ஒரு அரை கிலோமீட்டர் குறைவான தொலைவில் குகைக்குள் அமைந்துள்ள இந்த மர்ம கோவிலை காணலாம். இந்தக் கோவில் இதற்கு முன்பு ஒரு குகையாக தான் காணப்பட்டது.
கிராமத்து பொதுமக்கள் இந்த குகைக்குள் வந்து மழை நேரத்தில் தஞ்சம் அடைவார்கள். வனவிலங்குகள் இந்த குகையில் வாழ்ந்து வந்தன. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து சமீபத்தில் இந்த மலைக்கு வந்த குமார் என்கிற சாமியார் இந்த குகையை பார்த்து இதில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இந்த குகையில் பல அறைகளை உருவாக்கி ஒரு கோவில் போல கட்டி எழுப்பினார். இந்த குகைக்கு ஜன்னல் வாசல் அறைகள் கதவுகள் என அனைத்தும் வைத்து பார்க்க அற்புதமான ஒரு வீடு போல இந்த கோவிலில் உருவாக்கி அங்கேயே தங்கி வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்.
அவர் மட்டும் வாழாது நாய்கள் வளர்த்து ஆடு மாடுகளை வளர்த்து அங்கேயே மேய்த்துக்கொண்டு வருகிறார். தண்ணீருக்கு என்ன செய்வார் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அங்கே ஒரு பெரிய சுனை உருவாகி அதிலிருந்து தண்ணீர் ஓடையாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சுனையில் வெயில் காலம் குளிர் காலம் மழை காலம் என எந்த காலத்திலும் வழியாத வகையில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.
அதுதான் இந்த சாமியாருக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. அதனால் தண்ணீருக்கு பிரச்சினை கிடையாது. அதிகப்படியான வெயில் காலத்தில் மட்டும்தான் தண்ணீர் சற்று பற்றி போக வாய்ப்புள்ளது தண்ணீர் பிரச்சனை வரக்கூடும்.
அந்த நேரத்தில் கீழே இருந்து கிராமங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தற்காத்துக் கொள்வார். வெயில் காலம் தெரிந்த பிறகு மீண்டும் பழையபடி சுனையில் தண்ணீர் சுரக்க ஆரம்பித்து விடும். ஆதலால் அங்கு வாழ்வதற்கு ஏற்ற தண்ணீருக்கு பஞ்சம் இல்லை.
உணவுக்கு மட்டும் அரிசி பருப்பு என அனைத்து பொருட்களையும் கொண்டு சென்று அந்த குகை கோவிலுல் வைத்துக் கொள்வார். உணவு தேவைக்கு அங்கேயே சமைத்து சாப்பிட்டு இப்போது வரை அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
நீங்கள் ஒரு முறை இந்த குகை கோவிலுக்கு வந்துவிட்டால் இங்கிருந்து திரும்பி செல்வதற்கு உங்களுக்கு மனம் இருக்காது. ஆடு மாடுகளை வளர்த்து செழுமையாக பார்த்துக் கொள்ளும் இவர் தேக்கு மரம் மாமரம் பாக்கு மரம், பாதாம் மரம் என பல வகையான மரங்களை வளர்த்து காட்டை பசுமையாக்கி வைத்திருக்கிறார்.
இந்த குகைக்கோவிலுக்கு ஒருமுறை சென்றால் இது காடா? அல்லது வீடா? என்பதே உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அந்த வகையில் ஒரே ஒரு சாமியார் மட்டும் இவ்வளவு பெரிய மாற்றத்தை இந்த குகையில் செய்திருக்கிறார். ஆதலால் பருவதமலை சுற்றி பார்க்க வரும் பக்தர்கள் இந்த கோவிலுக்கும் செல்ல மறந்து விடாதீர்கள்.
இது மட்டுமல்ல அது இந்த குகையை சுற்றி மலை பாம்புகள் சுற்றி வருவதாகவும் அந்த மலைப்பாம்புகள் இந்த சாமியார் வளர்க்கும் ஆடுகளை சிலதை நெருங்கி விட்டதாகவும் வதந்திகள் பரவுகிறது. இது உண்மையா என்று அந்த சாமியாரிடம் விசாரித்த போது அவரும் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்.
அதிர்ச்சியாகி நாங்கள் "பிறகு ஏன் நீங்கள் பயப்படாமல் இந்த இடத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள்? உங்களை இந்த மலைப்பாம்புகள் எதுவும் செய்து விடாதா?" என்று கேட்டதற்கு "அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது. எனக்கு கடவுள் கிருபை உள்ளது. ஆதலால் எனக்கு இங்கு வாழ்வதில் எந்த பிரச்சனையும் கிடையாது" என்று கூறினார்.
இவரது இந்த பேச்சை கேட்டதும் கீழே உள்ள கிராமத்து பொதுமக்கள் இந்த குகைக்கோவிலுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்கள். மலைப்பாம்புகள் பர்வத மலையின் அதிகமாக இருக்கின்றது; அதுவும் இந்த கோவிலை சுற்றி அதிகமாக இருக்கின்றது! என்பதை தெரிந்ததுதான் இந்த பயத்திற்கு காரணம்.
என்னதான் இந்த குகை கோவிலுக்கு மக்கள் வருவது பயம் என்றாலும் அதற்கு மாற்றாக பல பேர் வெளியூரிலிருந்தும் வந்து ஒவ்வொரு அமாவாசைப் பௌர்ணமி தினத்தன்று கோவிலுக்கு வந்து இங்குள்ள கன்னி அம்மன் தெய்வங்களை வழிபட்டு செல்கிகிலோமீட்டர்
70 வயது இந்த சாமியார் இன்றளவும் சுறுசுறுப்பாக மலைக்கு மேல் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அந்த குகை கோவிலில் வாழ்ந்து கொண்டு கீழே உள்ள கிராமத்திற்கு வருவதற்கு ஒரு சைக்கிளில் மலை மேலே இருந்து காடு வழியாக இரண்டு கிலோமீட்டர் ஓட்டிக்கொண்டு வந்து கிராமத்தை அடைகிறார். பிறகு அவருக்கு எந்த பொருள் தேவைப்பட்டாலும் கீழே இருந்து அவருக்கு அந்த பொருள்களைக் கொண்டு செல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றாலும் வேறு ஏதாவது பிரச்சனை தேவைப்படுகிறது என்றாலும் அவரை நேரடியாக மலைக்கு மேலே இருந்து கீழே வந்து பார்த்துக் கொள்வார்.
இன்று வரை தனிமையில் வாழும் இந்த சாமியார் மன்னித்து விடுங்கள் இவர் தனிமையாக வாழ வில்லை பல்லாயிரம் மரங்களோடும் ஆடு மாடுகள் நாய்களோடும் வாழ்ந்து வருகிறார். இவரை காணவாவது ஒருநாள் நீங்கள் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.