கிழக்கு தொடர்ச்சி மலையை பற்றிய முக்கிய தகவல்கள்
அறிமுகம் மற்றும் அமைவிடம்:
- கிழக்கு தொடர்ச்சி மலைகள் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் இயற்கை வளம் மற்றும் புவியியல் போன்றவற்றில் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய ஒரு மலைத்தொடராக இந்த கிழக்கு மழை தொடர்ச்சி இருக்கிறது.
- மேலும் கிழக்கு தொடர்ச்சி மலையானது மேற்கு தொடர்ச்சி மலையை போல் தொடர்ச்சியாக இல்லாமல் இது துண்டு துண்டாக இருக்கிறது. இந்த கிழக்கு தொடர்ச்சி மலையானது இந்தியாவின் வங்காள விரிகுடா அருகாமையில் அமைந்துள்ளது.
- கிழக்கு தொடர்ச்சி மலையானது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கத்திலிருந்து தமிழ்நாடு வரை படர்ந்து காணப்படுகிறது.கிழக்கு தொடர்ச்சி மலையின் நீளமானது சுமார் 1750 கிலோமீட்டர் ஆகும்.
- மேலும் கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் உயரமான சிகரம் ஜிந்தாகடா மலை ஆகும். இதன் உயரமானது 1690 மீட்டர் ஆகும். மேலும் இந்த மலையானது ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது.
- இந்த மலைகளுக்கிடையில் நதிகள் ஓடுவதால் மலையானது அங்கங்கே துண்டு துண்டாக காணப்படுகிறது.மகாநதி கோதாவரி காவேரி கிருஷ்ணா போன்ற நதிகள் இருக்கின்றன.
கிழக்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்பு:
- சார்னோகைட், கோண்டலைட்,படிக பாறைகள் மற்றும் கருங்கல் போன்ற பாறையில் அதிக அளவில் இருக்கின்றன.
- கிழக்கு தொடர்ச்சி மலையானது மேற்கு தொடர்ச்சி மலையை விட மிகவும் பழமையான பாறை வகைகள் இருக்கின்றன.
- கிழக்கு தொடர்ச்சி மலையானது புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.
- மேலும் இந்திய துணை கண்டத்தின் புவியியல் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த கிழக்கு தொடர்ச்சி மலையானது அமைந்துள்ளது.
கிழக்கு தொடர்ச்சி மலையின் அமைப்பு:
- ஈரப்பதம் நிறைந்த வனப்பகுதிகள், உலர்ந்த பசுமை வனங்கள், பசுமையான மரங்கள் புல்வெளிகள் போன்றவை அமைந்து மலையானது மிகவும் பசுமையாக காணப்படுகிறது.
- வேம்பு, இலுப்பை, வேப்பமரம், சடிவேர், பசலை போன்ற முக்கிய மரங்கள் இருக்கின்றன.
- மேலும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மரபு வகை மூலிகைகள் இந்த கிழக்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவில் காணப்படுகிறது.
- கிழக்கு தொடர்ச்சி மலையில் புலிகள், சிறுத்தைகள், மான்கள், காடுவெள்ளி மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்கள் கிழக்கு தொடர்ச்சி மலையில் இருக்கின்றன.
- கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சில முக்கிய மலைப்பகுதிகள்:
- அரக்குவி, அமிர்தி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஜவ்வாது மலை போன்ற முக்கிய மலைகள் அமைந்துள்ளன.
கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நதிகள்:
- மகாநதி-இந்த நதியானது ஓடிஸா மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
- கோதாவரி-தெலுங்கானா மற்றும் ஆந்திரா மலைப்பகுதியில் இந்த நதியானது அமைந்துள்ளது.
- கிருஷ்ணா நதி- ஆந்திரா மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
- காவேரி-காவிரி நதியானது தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
நீர்வீழ்ச்சிகள்:
பீமன் நீர்வீழ்ச்சி,அமிர்தி நீர்வீழ்ச்சி மற்றும் பல நீர்வீழ்ச்சிகள் இந்த கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளன.
கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுலா இடங்கள்:
ஏற்காடு மலைப்பகுதியில் சேர்வாய் மழை, மற்றும் சில சுற்றுலா இடங்கள், குளிர்ந்த வானிலை போன்றவைகள் அற்புதமாக இருக்கின்றன.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைக் குன்றுகள்:
ஜவ்வாது மலை:
- ஜவ்வாது மலை ஆனது திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பறந்து விரிந்து காணப்படுகிறது.\
- மேல்பட்டு இதன் உயரமான சிகரம்.
- ஜவ்வாது மலையில் பல்வேறு வகையான பழவகை மரங்கள், மூலிகை மரங்கள், சந்தன மரங்கள் போன்ற மரங்கள் சிறப்பு வாய்ந்தது.
கல்வராயன் மலை:
- கரலர் என்ற பழங்குடியினரின் பெயரிலிருந்து வந்தது.
- இந்த மலையின் உயரமானது 600 மீட்டர் முதல் 1220 மீட்டர் வரை காணப்படுகிறது.
சேர்வராயன் மலை:
- சேலம் நகரில் இருந்து சிறிது அருகாமையில் அமைந்துள்ளது.
- சுமார் 1200 முதல் 1620 மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்டது.
- ஏற்காடு மலை வாழிய இடம் இந்த பகுதியில் அமைந்துள்ளது. (சோலைக் கரடு) 1620 மீட்டர் தென்பகுதியில் உள்ள உயரமான மலை சிகரமாக உள்ளது.
கொல்லிமலை:
- நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- சுமார் 1300 மீட்டர் வரை உயரம் கொண்டது.
- அறப்பளீஸ்வரர் கோயில் இங்கு அமைந்துள்ளது.
- மேலும் பசுமை மாறா கடிகள் இங்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது.
பச்சைமலை:
- திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் குறைந்த உயரத்துடன் காணப்பட்டு வருகிறது.
- பச்சை தாவரங்கள் அதிகமாக காணப்பட்டு வருவதால் பச்சை மலை என்று பெயர் பெற்றது.
- இந்தப் பகுதியில் பலாப்பழம் அதிகமாக விளையக்கூடிய விளைபொருளாக இருக்கிறது.
சிறுமலை, கரந்தைமலை:
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம்:
நீர்வளம்:
- இந்த மலைத்தொடரானது பல சிறிய மற்றும் பெரிய ஆறுகளின் பிறப்பிடமாக இருக்கிறது.
- பாலாறு, பெண்ணையாறு, நாகவல்லி போன்ற ஆறுகள் இந்தப் பகுதியில் இருந்து உற்பத்தி ஆகிறது.
- மேலும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி போன்ற முக்கிய நதிகள் இந்த மலைகளை தான் கடந்து செல்கிறது.
வனவளம்:
- வறண்ட பசுமை மாறா காடுகள், முட்புதர் காடுகள் போன்ற ஒன்பது வகையான காடுகள் இங்கு காணப்பட்டு வருகிறது.
- மேலும் அரிய வகை மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் மேலும் நறுமணப் பொருட்கள் இங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கின்றன.
கனிம வளம்:
- சுண்ணாம்பு கற்கள், பாக்சைட், இரும்புத்தாது போன்ற பல்வேறு வகையான கனிம வளங்கள் இங்கு அதிக அளவில் இருக்கின்றன.
பழங்குடியின மக்கள்:
- இந்த மலைப்பகுதியில் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் இருப்பிடமாக உள்ளது.
- சவரா, கொண்ட டோரா, காடபா போன்ற பழங்குடியின மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
எதிர்கொள்ளும் சவால்கள்:
- காடுகள் அழிப்பு,வாழிடம் இழப்பு போன்ற சவால்களை இந்த மலைத்தொடர் எனது எதிர்கொண்டு வருகிறது.



