நமது பர்வதமலைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா? Mr Paruvathamalai

பர்வத மலையின் சிறப்புகள் நிறைய இருக்கின்றன. அதில் பருவத மலையின் இயற்கையாக அங்குள்ள மூலிகைகள் மற்றும் இயற்கை நிறைந்த சூழல்கள் நம் உடலுக்கு ஏற்றவாறு இருக்கின்றன. மேலும் இது திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற மலை ஆகும். இந்த மலையை ஏறுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.உங்களுக்கு பல சிறந்த அனுபவமும் கிடைக்கின்றன. 

மலையின் மேல் அமைந்துள்ள கோயிலில் உள்ள மல்லிகார்ஜுனர் கோயிலானது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோயிலாகும். நீங்கள் மலை ஏறுவதற்கு முன்பாக அதிக அளவு நீர் எடுத்துக் கொண்டால் மட்டுமே உங்களுக்கு ஓரளவுக்கு சிரமம் இன்றி மலையை ஏற ஏதுவாக இருக்கும்.

பர்வதமலையின் முக்கிய சிறப்புகள் : 

1) திருவண்ணாமலை மாவட்டத்திலே மிகவும் உயரமான மலை நமது பருவதமலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது.

2) தமிழ்நாட்டில் மலையில் சிவன் தலங்கள் அமைந்துள்ள மலைகளின் மூன்றாவது மிகப் பெரிய மலையாக பருவதமலை உள்ளது. அதாவது முதல் இடத்தில் வெள்ளையங்கிரி மலை அமைந்துள்ளது. இரண்டாவதாக சதுரகிரி மலை அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் நமது பர்வதமலை அமைந்துள்ளது.

3) சுமார் 4560 அடி உயரம் உடைய பர்வதமலை 5000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும்.

4) நமது பருவதமலையைச் சுற்றி 15 கிராமங்களுக்கு மேல் அமைந்துள்ளது. அடர்ந்து படர்ந்த காடுகள் நீண்டுள்ளதால்  மலையில் இருந்து வழிந்து ஓடும் அருவிகள் ஓடைகள் மூலமாக சுற்றியுள்ள கிராமங்கள் பயன்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post