பர்வதம் என்றால் மலை என்று தமிழில் அர்த்தம் அதேபோல மலை என்றாலும் மலை என்றுதான் அர்த்தம். ஆதலால் மலைகளுக்கெல்லாம் மலை என்று பொருள்படும் நமது பருவதமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திரு அண்ணாமலை என்பதை நாம் எப்படி வழக்கு மொழியில் மருவி திருவண்ணாமலை என்று அழைக்கிறோமோ அதே போல பர்வதமலை என்று அழைக்கப்பட்ட நமது மலை தற்போது பருவதமலை யாக மாறி உள்ளது.
நிறைய பேர் பழைய சொல்லான பர்வதமலை என்பதை உச்சரித்து எழுதி வருகிறார்கள். அதை கொஞ்சம் திருத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். அல்லது அதே பெயரில் எழுதினாலும் அழைத்தாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை இரண்டும் ஒன்றுதான்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை மலையை விட இரண்டு மடங்கு பெரிய மலை பருவதமலை. அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலே ஆன்மீக வழிபாட்டு மலைத்தொடர்களில் மூன்றாவது மிகப்பெரிய மலையாக பருவதமலை கருதப்படுகிறது.
இந்த பருவதமலைக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஜனவரி 1 2025 ஆண்டிலிருந்து பர்வதமலை ஏற பல விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கூற வேண்டும் என்றால் முன்பெல்லாம் 24 மணி நேரமும் எப்பொழுது வேண்டுமானாலும் மலை ஏற அனுமதி இருந்த நிலையில் தற்போது அதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
paruvathamalai |

அதன்படி அதிகாலை 5 மணி முதல் மதியானம் 3 மணி வரை மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர் வனத்துறையினர்.
ஏன் மூன்று மணிக்கு மேல் மலையரக்கூடாது என்று வனத்துறை காவலர்கள் கூறுகிறார்கள் என்றால் மூன்று மணிக்கு மேல் ஏறினால் இரவில் தான் பர்வதமலை கடப்பாரை படிக்கட்டு உட்பட சிரமமான மலையற்ற பாதைகளை ஏற வேண்டி இருக்கும் அப்பொழுது ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விபத்து ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமல்லாமல் இரவில் பூச்சி, விஷப் பாம்புகள் நடமாட்டம் இருப்பதினாலும் அங்கு ஏதாவது கடித்து அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவ்வளவு பெரிய மலையில் இருந்து உடனே கீழே இறங்க முடியாது என்கிற காரணத்தினாலும் இரவில் மலை ஏற தடைச் செய்யப்பட்டுள்ளது.
பருவதமலை புதுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட உள்ள ஒரு வனப்பகுதியாகும். எனவே புதுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினர் இந்த விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் மலையேறும் பக்தர்கள் தங்கள் கொண்டு போகும் பிளாஸ்டிக் குப்பைகளை பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மலை மீது தூக்கி எறிந்து விட்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக மலையேறும் பக்தர்கள் ஒவ்வொருவரிடமிருந்து தலா ரூபாய் 10 வீதம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணம் 12 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கிடையாது. அவர்கள் இலவசமாக பருவதமலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதில் விதிவிலக்காக பருவதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களான தென்மகாதேவமங்கலம், கடலாடி, திடீர் நகர், மேலாக்கொடி, பாலூர், மேல்சோழங்குப்பம், பட்டியந்தல், கெங்கலமகாதேவி, அருணகிரி மங்கலம், நம்மந்தங்குட்டை, கோயில் மாதிமங்கலம், புதுப்பேட்டை, உள்ளிட்ட அக்கம் பக்கத்து 15 கிராமங்களில் வாழும் மக்களுக்கு பருவதமலை ஏற எவ்வித கட்டணமும் வசூலிக்க படாது என்று கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இலவசமாக மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
மலை ஏற வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக ஆதார் அட்டையை கொண்டு வருவது முக்கியம்; ஏனென்றால் ஆதார் அட்டை அடிப்படையில் பருவதமலை சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் சலுகை வழங்கப்படுவதால் அவர்களது வயது மற்றும் முகவரியை தெரிந்து கொள்ள வனத்துறை காவலர்கள் இந்த சட்டத்தை கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.
மேலும் புதிய அறிவிப்பாக மே மாதம் முதல் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் 60 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்களும் பருவதமலை ஏற அனுமதி இல்லை என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஏனென்றால் குழந்தைகளும் வயதான பெரியவர்களும் மலையேற சிரமப்படும் காரணத்தினால் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
நீங்கள் நமது பருவத மலைக்கு வந்து இருக்கிறீர்களா? உங்கள் பயணம் எப்படி இருந்தது என்பதை கமெண்ட் பக்கத்தில் தெரிவிக்கவும் நான் படித்து தெரிந்து கொள்கிறேன்.
அல்லது இனிமேல்தான் பருவதமலைக்கு வர இருக்கிறீர்களா? எப்பொழுது வருவீர்கள் என்பதையும் கமெண்ட் பக்கத்தில் தெரிவிக்கவும் நான் படித்து தெரிந்து கொள்கிறேன் மக்களே!
மேலும் பருவதமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதள பக்கத்துடன் இணைந்து இருங்கள். நன்றி வணக்கம்!