பருவதமலையை இனிமேல் நீங்க ஏற முடியாது! வனத்துறையினர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்மகாதேவமங்கலத்தில் (மாதிமங்கலம் என்று அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளது பருவதமலை. 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4560 அடி உயரம் மற்றும் 5000 சதுர அடிக்கு மேற்பட்ட நில பரப்பளவில் அமைந்துள்ள பருவதமலை ஒரு சுற்றுலா தலமாக பார்க்கப்படுகிறது.

பருவத மலையில் மல்லிகாஜுனார் பிரம்மராம்பிகை அம்மாள் உள்ளிட்ட கோவில்கள் இருப்பதால் இது ஒரு ஆன்மீக வழிபாடு தளமாக கருதப்படுகிறது. 

இங்கே தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து மலையேறி மல்லிகாஜூனர் தெய்வத்தை வழிபட்டு செல்கிறார்கள். 

யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பருவதமலை உச்சி மீது ஏறி தங்கள் கைகளால் கடவுளுக்கு அபிஷேகம் செய்து  மகிழ்ச்சியாக மலையை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்ற முழு சுதந்திரம் இருந்தது.

ஆனால் ஜனவரி 1 2025 ஆம் ஆண்டிலிருந்து பருவதமலையில் அடிக்கடி மலை ஏற அனுமதி இல்லை என வனத்துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 1 முதல் அதிகாலை 5 மணி முதல் மத்தியானம் 3 மணி வரை மட்டுமே பருவதமலை ஏற அனுமதிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பொதுமக்களை கோவிலுக்குள் செல்லவோ அல்லது மலையேறவோ வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. 

அது மட்டுமல்லாது மலையேறும் பக்தர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூபாய் 10 வீதம் வசூலிக்கப்படுகிறது. 

பருவதமலைக்குள் பிளாஸ்டிக் பொருள்கள் அல்லது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதித்து வனத்துறையினரால் முழு பரிசோதனைக்கு பிறகு மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது பருவதமலை அசுத்தப்படுத்தக் கூடாது என்கிற புனித நோக்கத்தில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று ஒருபுறம் யோசித்துக் கொண்டிருக்க மலையேறும் வழிகளில் நிறைய கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பையில் அடித்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது இதை அவர்கள் எதுவும் தடை விதிக்கவில்லையே? ஏன்? என்ற காரணம் நமக்குள் எழுகிறது.

அது மட்டுமல்ல பருவதமலை ஏற செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமிருந்து ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும் எனவும் அந்த ஆதார் அட்டைகளை சரி பார்த்த பிறகு மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். 

பருவதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கெங்கலமகாதேவி, செம்மடந்தாங்கல், நம்மந்தங்குட்டை, கடலாடி, பட்டியந்தல், தென் மகாதேவ மங்கலம், திடீர் நகர், மேலாக்கொடி, பாலூர், உள்ளிட்ட கிரிவல பாதையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு மட்டுமே கட்டணமில்லா பருவதமலை ஏறும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 

இது ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகின்ற கட்டுப்பாடுகள் என்ற போதிலும் புதிதாக ஒரு சில கட்டுப்பாடுகள் வனத்துறையினரால் விதிக்கப்பட்டுள்ளது. 

இனிமேல்  10 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையும் 60 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்களையும் பாதுகாப்பு கருதி பருவதமலை ஏறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று வனத்துறையினரால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஏனென்றால் பருவதமலையில் கடப்பாரை படிக்கட்டு என்று ஒரு சிக்கலான கரடு முரடான கம்பிகளை பிடித்துக்கொண்டு ஏறும் அபாயகரமான பாதை ஒன்று உள்ளது.

கரணம் தவறினால் மரணம் என்கிற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ள இந்த கடப்பாரை படிக்கட்டு மலையேற்ற பாதை 60 வயதுக்கு கீழ் உள்ள நபர்களால் ஏற முடியாது; மற்றும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளாலும் ஏற முடியாது என்கிற காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நீங்கள் நமது பருவதமலையை சுற்றி பார்க்க வந்துள்ளீர்களா? எத்தனை முறை பருவதமலை ஏறினீர்கள் என்பதை பற்றி கருத்துகளை கீழே கருத்து பக்கத்தில் தெரிவிக்கவும். 

மேலும் வேறொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி வணக்கம்!

Post a Comment

Previous Post Next Post