பருவதமலை கோவில் திறக்கும் நேரம் எப்போது தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 4560 அடி உயரம் உள்ள நமது பருவதமலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளி மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து மலையேறி பயணித்து அனுபவிக்கிறார்கள்.

இந்த பருவதமலை முன்பெல்லாம் 24 மணி நேரமும் மக்கள் வந்து மலையேறி மலை மீது உள்ள மல்லிகார்ஜுனர் மற்றும் பிரம்மராம்பிகை தெய்வங்களை வழிபட்டும் சென்று கொண்டிருந்தார்கள். 

ஆனால் தற்போது உச்சியில் உள்ள கோவிலில் தங்குவதற்கு லட்சக்கணக்கான கூட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிரம்பி வழியில் அவர்களை  கட்டுக்குள் கொண்டு வருவதற்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி புதுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பருவதமலை வனத்துறையினர் இனிமேல் அதிகாலை 5 மணி முதல் மத்தியானம் 3 மணி வரை மட்டுமே மழையேறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 

அதற்காக பருவதமலை ஏறச் செல்லும் தொடக்க நிலையில அமைந்துள்ள பச்சையம்மன் கோவிலில் இரும்பு கதவுகள் அனைத்து மலைகள் யாரும் செல்ல முடியாதபடி வனத்துறையினர் பாதுகாப்புக்கு அமர்ந்துள்ளார்கள்.

அதனால் இனிமேல் 24 மணி நேரங்களில் பருவதமலை மேல் சுற்றிக்கொண்டு இருக்க அனுமதி கிடையாது; நேரத்தை தான் குறைத்து இருக்கிறார்கள் தவிர நாட்களை குறைக்கவில்லை. நீங்கள் வாரம் முழுவதும் எந்த நாட்களில் வேண்டுமானாலும் பருவதமலை ஏறலாம். ஆனால் அந்த நாட்களில் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மலை ஏறுவதற்கு பக்தர்கள் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மலை மீது ஏறி வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் அல்லது மழை நேரத்தில் தங்குவதற்காக தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மலை உச்சியில் நேரடியாக இடியோ மின்னலோ தாக்கும் பாதிப்பு இருப்பதால் இடிதாங்கி இரண்டு வைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஒருமுறை பிடித்தாக்கி பருவதமலை மேலே உள்ள மல்லிகார்ஜுனர் கோவில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கோவிலை மறுசீரமைத்து புதிதாக கட்டிய பிறகு இடியோ மின்னலோ தாங்காதபடி இடிதாங்கி இரண்டு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த  இடிதாங்கி பருவதமலை உச்சியில் கோவில் சுற்றுவதற்காக பகுதிகளில் எங்கேயும் இடி தாங்காதபடி மின்னலை தடுத்து கோவிலை பாதுகாக்கிறது.

Post a Comment

Previous Post Next Post