Monday, 12 January 2026

இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக கோவில்கள் இருக்கிறது? |Mr Paruvathamalai

 இந்திய நாட்டில் கோயில்கள் என்பது வெறும் வழிபாட்டு தலங்கள் மட்டும் இல்லாமல் அவை நாட்டின் கலை,கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அடையாளங்களாக விளங்கக்கூடிய ஒன்றாகும். நமது இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்கள் மற்றும் அந்த மாநிலங்களில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக இருக்கின்றன. 

1) தமிழ்நாடு மாநிலம்: 

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான கோவில்கள் இருக்கின்றன. மேலும் இந்தியாவிலேயே மிகவும் அதிக கோயில்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. மேலும் திராவிட கட்டிடக்கலைக்கு உலக புகழ்பெற்ற தமிழ்நாடு கோவில்கள் விளங்கி வருகின்றன. மேலும் சோழ பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோபுரங்கள் தமிழ்நாட்டில் இருப்பது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. நமது தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய தோராயமாக 79000+ மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆனது தமிழ்நாட்டில் மிக முக்கிய ஆன்மீக தலமாக பார்க்கப்பட்டு வருகிறது.

கோவில்களை தவிர தமிழ்நாட்டில் பல்வேறு வகையான இயற்கை சுற்றுலா தளங்கள் மற்றும் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இயற்கை வளங்கள் விவசாயம் என பல்வேறு வகையில் தமிழ்நாடு இருந்து சிறந்து விளங்கி வருகிறது.

2) மகாராஷ்டிரா மாநிலம்: 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையிலான சிறிய மற்றும் பெரிய கோவில்கள் இருக்கின்றன. மேலும் அஷ்ட விநாயகர் கோவில்கள் மற்றும் பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவில் என பல்வேறு வகையான சிறப்பு கோவில்கள் இருக்கின்றன. இந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தோராயமாக உள்ள கோவில்களில் எண்ணிக்கையானது 77,000 மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் சித்தி விநாயகர் கோவில் ஆனது மிகவும் முக்கிய ஆன்மிகத்தலமாக பார்க்கப்பட்டு வருகிறது. 

3) கர்நாடக மாநிலம்: 

கர்நாடகா மாநிலம் ஆனது அதிக அளவு இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு வகையான வரலாற்று சிறப்புமிக்க பழங்கால யுனெஸ்கோ காலகட்டத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் இருக்கின்றன. கர்நாடக மாநிலத்திலும் பல்வேறு வகையான சிறப்பு மிக்க கோவில்கள் இருக்கின்றன. இதில் மஞ்சுநாதர் கோவில் மற்றும் மூகாம்பிகை கோவில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாக இருக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் மட்டும் தோராயமாக 61,000 மேற்பட்ட கோவில்கள் இருந்து வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள விருபாக்ஷா கோவில் ஆனது மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக தலமாக இருக்கிறது. கர்நாடக மாநிலத்திலும் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் இருக்கின்றன.

4)மேற்கு வங்கம் மாநிலம்: 

மேற்குவங்கம் மாநிலம் ஆனது காளி வழிபாடு மிகவும் அதிகமாக இருக்கின்ற ஆன்மீக தலமாக இருக்கிறது. மேலும் சுடுமண் தலை திறனுடன் கட்டப்பட்ட பல்வேறு வகையான விஷ்ணுபூர் கோவில்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. மேற்கு வங்கத்தில் மற்றும் இருக்கின்ற கோவில்கள் எண்ணிக்கை தோராயமாக 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. மேலும் மேற்குவங்கம் மாநிலத்தில் தட்சிணேஸ்வரர் காளி கோவில் ஆனது மிகவும் புகழ் பெற்ற மற்றும் முக்கிய ஆன்மீகத் தலமாக இருந்து வருகிறது. 

5) குஜராத் மாநிலம்: 

குஜராத் மாநிலம் ஆனது இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலமாக இருக்கிறது. மேலும் 12 ஜோதிலிங்கத் தலங்களில் ஒன்றான சோம்நாத் மற்றும் கிருஷ்ணரின் துவாரகை தலமானது இங்கு அமைந்துள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தில் நவீன கட்டிடக்கலையில் கட்டப்பட்ட அக்ஷர்தாம் கோவிலும் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. மேலும் குஜராத் மாநிலத்தில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்து வருகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவில் ஆனது மிகவும் முக்கிய ஆன்மிக தலமாக பார்க்கப்பட்டு வருகிறது.

6) ஆந்திரப் பிரதேசம் மாநிலம்: 

ஆந்திர பிரதேசம் மாநிலமானது உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றான திருப்பதிக ஏழுமலையான் கோவில் ஆந்திர பிரதேசத்தில் இருப்பது இ மாநிலத்தின் ஒரு சிறப்பு வாய்ந்தவையாகும். மேலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு வகையான சிறப்பு வாய்ந்த கோவில்கள் இருக்கின்றன. டி சைலம் மல்லிகார்ஜுனர் கோவிலும் இங்குதான் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் தோராயமாக 47000 மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இங்குள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆனது மிகவும் முக்கிய ஆன்மீக தலமாக பார்க்கப்பட்டு வருகிறது. 

7) ராஜஸ்தான் மாநிலம்: 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவில்களானது மார்பில் என்னும் புகழ் பெற்ற கற்களால் செதுக்கப்பட்டவையாகும். மேலும் மௌண்ட் அபுவில் உள்ள தில்வாரா ஜெயின் கோவில்கள் மற்றும் கருணை மாதா கோவில் போன்ற கோவில்கள் ஆனது உலக பிரபலம் வாய்ந்த கோவிலாக இருக்கிறது. இந்த ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் தோராயமாக 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இம்மானிலத்தில் உள்ள புஷ்கர் பிரம்மா கோவில் ஆனது மிகவும் முக்கிய ஆன்மிகத்தலமாக இருக்கிறது. 

8) உத்திரபிரதேச மாநிலம்:

உத்திரபிரதேசம் மாநிலம் ஆனது இந்து மதத்தின் புனித நகரமான வாரணாசி, அயோத்தி மற்றும் மதுரா போன்ற புகழ்பெற்ற இடங்கள் இங்கு அமைந்துள்ளன. ஆன்மீக ரீதியாக பார்த்தால் இம் மாநிலமானது மிகவும் ஒரு முக்கியமான இடமாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் மட்டும் தோராயமாக 37,000 மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இம்மானிலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஆனது மிகவும் முக்கிய மற்றும் பிரபல ஆன்மீகத்தனமாக பார்க்கப்பட்டு வருகிறது. 

9) ஒடிசா மாநிலம்: 

ஒடிசா மாநிலமானது கலிங்க கட்டிடக்கலையின் ஒரு உறைவிடமாக இருக்கிறது. மேலும் கோனார் சூரியனார் கோவில் மற்றும் பூரி ஜெகநாதர் கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்கள் இந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் மட்டும் தோராயமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இங்குள்ள பூரி ஜெகநாதர் கோவில் முக்கிய ஆன்மீக தலமாக இருக்கிறது. 

10) மத்திய பிரதேசம் மாநிலம்: 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு வகையான பெருமை வாய்ந்த கோவில்கள் இருக்கின்றன. இங்குள்ள உஜ்ஜைனி சிவன் ஆலயம் ஆனது மிகவும் பிரபலம் வாய்ந்த கோவிலாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் மட்டும் தோலாயுமாக 25,000 மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இங்குள்ள உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோவிலானது மிகவும் முக்கியம் வாய்ந்த கோவிலாகும். 

11) கேரள மாநிலம்: 

கேரள மாநிலமானது கடவுளின் தேசம் எனப்படும் பத்மநாபசுவாமி கோவில் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் போன்ற புகழ்பெற்ற மற்றும் பழமையான கோவில்கள் இங்கு இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். மேலும் கேரள மாநிலத்தில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்களும் இருக்கின்றன. நீங்கள் கேரளாவிற்கு செல்வதன் மூலமாக இயற்கையின் அழகை மிகவும் அதிக அளவு ரசிக்கலாம். தி

12) தெலுங்கானா மாநிலம்: 

யாதத்திரி லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் பத்ராசலம் ராமர் கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்கள் இங்கு இருப்பது இம் மாநிலத்தின் முக்கிய அடையாளங்கள் ஆகும். 

13) உத்தரகாண்ட் மாநிலம்: 

பத்ரிநாத் கேதர்நாத் கங்கோத்ரி யமுனுத்திரி போன்ற புனித தலங்கள் இங்கிருக்கின்றன. மேலும் இந்த தலங்கள் ஆனது இமயமலை சாரலில் அமைந்துள்ளதால் மிகவும் அழகானதாகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகவும் இருக்கிறது. 

14) இமாச்சலப் பிரதேசம்: 

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மலைகளின் உச்சியில் அமைந்துள்ள நைனா தேவி, சக்தி பீடங்கள் போன்ற பல்வேறு வகையான கோவில்கள் இங்கு அதிகமாக இருப்பது மிகவும் சிறப்பாகும். 

15) பீகார் மாநிலம்: 

பீகார் மாநிலத்தில் புத்தர் ஞானம் பெற்ற பூத் கையா மற்றும் மகாவிதீர் மந்திர் போன்ற பழமையான ஆன்மீக தலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த இடங்களானது உலகப் புகழ்பெற்ற இடங்களாகும். 

16) ஜார்கண்ட் மாநிலம்: 

இந்த மாநிலத்தில் வைத்தியநாத் ஜோதிலிங்க கோவில் இருக்கின்றன. இந்த கோவில் ஆனது இம் மாநிலத்தின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல்வேறு வகையான பக்தர்கள் இங்கு சென்று வழிபட்டு வருகின்றனர். 

17) சத்தீஸ்கர் மாநிலம்: 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழமையான போரம் தியோ மற்றும் தண்டேஸ்வரி அம்மன் கோவில்கள் இந்த மாநிலத்தில் அமைந்திருப்பது மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இ மாநிலத்தில் பல்வேறு வகையான பழமை வாய்ந்த கோவில்கள் இருக்கின்றன. 

18) ஹரியானா மாநிலம்: 

ஹரியானா மாநிலம் ஆனது மகாபாரதப் போர் நடந்த குரு சேத்திரம் இடமானது இங்கு அமைந்துள்ளது. மேலும் இ மாநிலத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் அமைந்துள்ளன. 

19) அசாம் மாநிலம்: 

அசாம் மாநிலத்தில் உள்ள புகழ் பற்ற காமாக்யா தேவி சக்தி பீடம் இம்மானிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடம் ஆகும். இது தந்திர வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற இடமாக இருக்கிறது. 

20) பஞ்சாப் மாநிலம்: 

பஞ்சாப் மாநிலம் ஆனது சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு பெயர் பெற்ற மாநிலமாக இருக்கிறது. மேலும் இந்த மாநிலத்தில் உள்ள துர்க்கியான கோவில் ஆனது இந்து மத வழிபாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருக்கிறது.



Monday, 8 December 2025

யாரும் அறிந்திடாத இமயமலை பற்றிய முழு தகவல்கள்

இந்தியாவில் உள்ள இமயமலையானது உலகிலேயே மிக உயரமான மடிப்பு மலை தொடராக இருக்கிறது. இந்த பதிவில் இமயமலை எப்படி உருவானது மற்றும் அதைப் பற்றிய சுவாரசியமான தகவலை பார்ப்போம்! 

இமயமலை உருவான விதம்: 

இமயமலை உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கோட்பாடு அதாவது ஆங்கிலத்தில் (Theory of Plate Tectonics). உலகில் சுமார் 40 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய தட்டு(Indian Plate) மற்றும் யுரேசிய தட்டு(Eurasian Plate) போன்ற இரண்டு பெரிய நிலப்பரப்புகள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டதன் மூலமாக இந்த மலைத்தொடரானது உருவாகியுள்ளது. 


இந்த நிகழ்வின் கால வரிசை மற்றும் செயல் முறையைப் பற்றி பார்ப்போம்! 

1. பாங்கேயா மற்றும் டெதிஸ் கடல்:

கிட்டத்தட்ட சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகில் உள்ள அனைத்து கண்டங்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே மாபெரும் கண்டமாக அதாவது பாங்கேயா(Pangaea) என்ற கண்டமாக இருந்தது. இந்த பாங்கேயா கண்டத்தைச் சுற்றிலும் பான்தலசா (Panthalassa)என்ற மாபெரும் கடல் இருந்தது.

பாங்கேயா கண்டம் பிளவு பட்டபோது வடக்கு பகுதி லாரேசியா எனவும் தெற்கு பகுதி கோண்டுவானாலாந்து எனவும் இரண்டு பகுதியாக பிரிந்தது. நமது இந்திய பகுதியானது தெற்கு பகுதியான கோண்டுவானாலாந்தில் இருந்தது.

இந்த இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையே மாபெரும் கடல் பகுதி ஒன்று இருந்தது. அந்த கடல் பகுதி தான் டெதிஸ் கடல் ஆகும்.

2. இந்திய தட்டின் நகர்வு:

சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தட்டானது கோண்டுவானாலாந்தில் இருந்து சற்று பிரிந்து வாடகைக்கு திசையை நோக்கி நகர்ந்து யுரேசிய தட்டை நோக்கி நகரத் தொடங்கியது. இந்த நகர்வானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது.

3. தட்டுகள் மோதல்: 

சுமார் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பாக வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய தட்டானது யூரேசியத் தட்டுடன் மோதியது.

இரண்டுமே கண்டத் தட்டுகள் என்பதால் இரண்டின் பாறை மிகவும் அடர்த்தியாக இருந்ததால் ஒரு தட்டு மற்றொன்றின் அடியில் செல்ல முடியவில்லை. இதன் மூலமாக மோதலின் அழுத்தத்தினால் இந்திய தட்டு யுரோசியத் தட்டு அடியில் தள்ளப்பட்டு டெதிஷ் கடலின் அடியில் இருந்த வண்டல் வடிவங்கள் மற்றும் பாறைகள் வலுவான சுருக்க விசைக்கு உட்பட்டன.

4. மடிப்பு மலைகளின் உருவாக்கம்: 

இந்த நிகழ்வின் மூலமாக சுருக்க விசை ஏற்பட்டு சுருக்க விசை காரணமாக வண்டல் பாறைகள் மெதுவாக மேல் நோக்கி மடிந்து மடிப்பு மலைகளாக உயர்ந்தது. இந்த உயர்ந்த மலைகளானது இமயமலை தொடராக உருவாகின. 

இந்த மலைகள் வெவ்வேறு கட்டங்களில் உயர்ந்து காணப்பட்டன. அதாவது சிவாலிக் மலைத்தொடர் இமயமலையின் மிக இளைய பகுதியாகும். 

இமயமலை என்றும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனுடைய உயரம் ஆண்டுகளுக்கு சுமார் 50 மில்லி மீட்டர் முதல் ஒரு சென்டிமீட்டர் வரை உயர்ந்து கொண்டே வருவதாக கணக்கிடப்பட்டு வருகிறது. 


இமயமலையில் உள்ள முக்கியமான பிரிவுகள்: 

இமயமலையானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் மூன்று முக்கிய இனை மலைத்தொடர்களாக உருவாகியுள்ளது. 

1) மலைத் தொடர் பெயர்: மாபெரும் இமயமலை

வேறு பெயர்: இமாத்திரி

இதனுடைய சராசரி உயரம்: 6000 மீட்டருக்கு மேலாக இருக்கிறது.

மலைத்தொடரின் முக்கிய அம்சங்கள்: 

உலகின் மிக உயரமான சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன. உதாரணமாக எவரெஸ்ட் சிகரம் கஞ்சன்ஜங்கா போன்ற பகுதியில் அமைந்துள்ளன. மேலும் இங்கு அதிக அளவில் நிரந்தர பனி உறைந்து காணப்படுகின்றன.

2) மலைத்தொடர் பெயர் : சின்ன இமயமலை

வேறு பெயர்: இமாச்சல மலைத்தொடர் 

இதனுடைய சராசரி உயரம்: சுமார் 3,700 முதல் 4500 மீட்டர் வரை இருக்கிறது. 

இந்த மலைத்தொடரில் முக்கிய அம்சங்கள்: 

அதிக சுகாதார விடுதிகளுக்கு பெயர் பெற்றது. உதாரணமாக சிம்லா டார்ஜிலிங். 

மேலும் பர்பஞ்சல் மற்றும் தௌலதார் போன்ற மலைத்தொடர்கள் உள்ளன.

3) மலைத்தொடர் பெயர்: வெளி இமயமலை 

வேறு பெயர்: சிவாலிக் மலைத்தொடர் 

இதனுடைய சராசரி உயரம்: சுமார் 900 முதல் 1100 மீட்டர் வரை இருக்கிறது.

மலைத்தொடரின் முக்கிய அம்சங்கள்

இமயமலையின் தென் மட்டமான மற்றும் இளைய பகுதியாக இது காணப்படுகிறது. மேலும் டூன்ஸ் என்று அழைக்கப்படும் பல தகவல்கள் இங்கு அதிக அளவில் காணப்பட்டு வருகின்றன.

இமயமலையின் முக்கியத்துவங்கள்

காலநிலை: 

மத்திய ஆசியாவில் இருந்து வரும் அதிக குளிரான காற்று இந்தியாவிற்குள் நுழைவதை தடுத்து இந்திய துணை கண்டத்தின் காலநிலையை மிதமாக பராமரிக்க இமயமலையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. 

மழை பொழிவு: 

தென்மேற்கு பருவக்காற்று களை இமயமலையானது தடுத்து நிறுத்தி இந்தியா முழுவதும் கனமழையை கொண்டு வர காரணமாக இருக்கிறது. 

நதிகள்: 

கங்கை,சிந்து மற்றும் பிரம்மபுத்திரா போன்ற வற்றாத நதிகள் இமயமலையின் பணிப்பாறைகளில் இருந்து தான் உருவாகி வட இந்திய சமவெளிகளுக்கு வளமான மண்ணையும் நீரையும் அதிக அளவில் கொண்டு சேர்க்கிறது. 

இயற்கை அரண்: 

இந்தியாவுக்கு வடக்கே இயற்கையான மற்றும் வலிமையான இலையை இமயமலையானது கொண்டுள்ளது. 

உயிர்கள்: 

இமயமலையானது பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாக அமைந்து வருகிறது. 



  • மேலும் இமயமலையானது இந்தியாவின் புவியியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையானது இந்தியாவுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது. 
  • மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளிலிருந்து அதிகளவு மக்கள் இமயமலையை சுற்றி பார்க்கவும் அந்த இடத்தில் வாகனங்களில் மூலம் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். 
  • இந்த இமயமலை பயணம் அனுபவமானது அதிக அளவு மனிதர்களுக்கு இயற்கையின் மீதான தாக்கத்தை ஏற்படுத்திய வருகிறது. இமயமலையானது மிகவும் அழகானதாகவும் அதிக அளவு குளிர் நிறைந்த பகுதியாகவும் காணப்பட்டு வருகிறது. 
  • மேலும் இமயமலையின் மீது பெரும்பாலான மனிதர்கள் அதன் உயரத்தை எட்டி இமயமலையின் மீது அவர்களுடைய நாட்டின் கொடிகளை நட்டு வைத்து விட்டு வருகின்றனர். இந்த அனுபவமானது மிகவும் சுவாரஸ்யமாகவும் இந்த பயணம் ஆனது மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். 
  • எனவே மனிதர்கள் இந்த இமயமலை பகுதிக்கு செல்லும் போது அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக செல்ல வேண்டும்.



Wednesday, 8 October 2025

கிழக்கு தொடர்ச்சி மலையை பற்றிய முக்கிய தகவல்கள்

அறிமுகம் மற்றும் அமைவிடம்:

  • கிழக்கு தொடர்ச்சி மலைகள் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் இயற்கை வளம் மற்றும் புவியியல் போன்றவற்றில் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய ஒரு மலைத்தொடராக இந்த கிழக்கு மழை தொடர்ச்சி இருக்கிறது.
  • மேலும் கிழக்கு தொடர்ச்சி மலையானது மேற்கு தொடர்ச்சி மலையை போல் தொடர்ச்சியாக இல்லாமல் இது துண்டு துண்டாக இருக்கிறது. இந்த கிழக்கு தொடர்ச்சி மலையானது இந்தியாவின் வங்காள விரிகுடா அருகாமையில் அமைந்துள்ளது. 
  • கிழக்கு தொடர்ச்சி மலையானது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கத்திலிருந்து தமிழ்நாடு வரை படர்ந்து காணப்படுகிறது.கிழக்கு தொடர்ச்சி மலையின் நீளமானது சுமார் 1750 கிலோமீட்டர் ஆகும்.
  • மேலும் கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் உயரமான சிகரம் ஜிந்தாகடா மலை ஆகும். இதன் உயரமானது 1690 மீட்டர் ஆகும். மேலும் இந்த மலையானது ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. 
  • இந்த மலைகளுக்கிடையில் நதிகள் ஓடுவதால் மலையானது அங்கங்கே துண்டு துண்டாக காணப்படுகிறது.மகாநதி கோதாவரி காவேரி கிருஷ்ணா போன்ற நதிகள் இருக்கின்றன.

கிழக்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்பு: 

  • சார்னோகைட், கோண்டலைட்,படிக பாறைகள் மற்றும் கருங்கல் போன்ற பாறையில் அதிக அளவில் இருக்கின்றன. 
  • கிழக்கு தொடர்ச்சி மலையானது மேற்கு தொடர்ச்சி மலையை விட மிகவும் பழமையான பாறை வகைகள் இருக்கின்றன. 
  • கிழக்கு தொடர்ச்சி மலையானது புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. 
  • மேலும் இந்திய துணை கண்டத்தின் புவியியல் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த கிழக்கு தொடர்ச்சி மலையானது அமைந்துள்ளது.

கிழக்கு தொடர்ச்சி மலையின் அமைப்பு: 

  • ஈரப்பதம் நிறைந்த வனப்பகுதிகள், உலர்ந்த பசுமை வனங்கள், பசுமையான மரங்கள் புல்வெளிகள் போன்றவை அமைந்து மலையானது மிகவும் பசுமையாக காணப்படுகிறது.
  • வேம்பு, இலுப்பை, வேப்பமரம், சடிவேர், பசலை போன்ற முக்கிய மரங்கள் இருக்கின்றன. 
  • மேலும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மரபு வகை மூலிகைகள் இந்த கிழக்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவில் காணப்படுகிறது.
  • கிழக்கு தொடர்ச்சி மலையில் புலிகள், சிறுத்தைகள், மான்கள், காடுவெள்ளி மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்கள் கிழக்கு தொடர்ச்சி மலையில் இருக்கின்றன.
  • கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சில முக்கிய மலைப்பகுதிகள்:
  • அரக்குவி, அமிர்தி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஜவ்வாது மலை போன்ற முக்கிய மலைகள் அமைந்துள்ளன.

கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நதிகள்: 

  • மகாநதி-இந்த நதியானது ஓடிஸா மலைப்பகுதியில் அமைந்துள்ளது. 
  • கோதாவரி-தெலுங்கானா மற்றும் ஆந்திரா மலைப்பகுதியில் இந்த நதியானது அமைந்துள்ளது. 
  • கிருஷ்ணா நதி- ஆந்திரா மலைப்பகுதியில் அமைந்துள்ளது. 
  • காவேரி-காவிரி நதியானது தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. 

நீர்வீழ்ச்சிகள்:

பீமன் நீர்வீழ்ச்சி,அமிர்தி நீர்வீழ்ச்சி மற்றும் பல நீர்வீழ்ச்சிகள் இந்த கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளன.

கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுலா இடங்கள்: 

ஏற்காடு மலைப்பகுதியில் சேர்வாய் மழை, மற்றும் சில சுற்றுலா இடங்கள், குளிர்ந்த வானிலை போன்றவைகள் அற்புதமாக இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைக் குன்றுகள்:

ஜவ்வாது மலை: 

  • ஜவ்வாது மலை ஆனது திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பறந்து விரிந்து காணப்படுகிறது.\
  •  மேல்பட்டு இதன் உயரமான சிகரம். 
  • ஜவ்வாது மலையில் பல்வேறு வகையான பழவகை மரங்கள், மூலிகை மரங்கள், சந்தன மரங்கள் போன்ற மரங்கள் சிறப்பு வாய்ந்தது. 

கல்வராயன் மலை: 

  • கரலர் என்ற பழங்குடியினரின் பெயரிலிருந்து வந்தது. 
  • இந்த மலையின் உயரமானது 600 மீட்டர் முதல் 1220 மீட்டர் வரை காணப்படுகிறது.

சேர்வராயன் மலை: 

  • சேலம் நகரில் இருந்து சிறிது அருகாமையில் அமைந்துள்ளது. 
  • சுமார் 1200 முதல் 1620 மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்டது. 
  • ஏற்காடு மலை வாழிய இடம் இந்த பகுதியில் அமைந்துள்ளது. (சோலைக் கரடு) 1620 மீட்டர் தென்பகுதியில் உள்ள உயரமான மலை சிகரமாக உள்ளது.

கொல்லிமலை: 

  • நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
  • சுமார் 1300 மீட்டர் வரை உயரம் கொண்டது. 
  • அறப்பளீஸ்வரர் கோயில் இங்கு அமைந்துள்ளது. 
  • மேலும் பசுமை மாறா கடிகள் இங்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது. 

பச்சைமலை: 

  • திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் குறைந்த உயரத்துடன் காணப்பட்டு வருகிறது. 
  • பச்சை தாவரங்கள் அதிகமாக காணப்பட்டு வருவதால் பச்சை மலை என்று பெயர் பெற்றது. 
  • இந்தப் பகுதியில் பலாப்பழம் அதிகமாக விளையக்கூடிய விளைபொருளாக இருக்கிறது. 

சிறுமலை, கரந்தைமலை: 

  • திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிடத்தகுந்த குன்றுகளாகும். 

சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம்: 

நீர்வளம்: 

  • இந்த மலைத்தொடரானது பல சிறிய மற்றும் பெரிய ஆறுகளின் பிறப்பிடமாக இருக்கிறது. 
  • பாலாறு, பெண்ணையாறு, நாகவல்லி போன்ற ஆறுகள் இந்தப் பகுதியில் இருந்து உற்பத்தி ஆகிறது. 
  • மேலும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி போன்ற முக்கிய நதிகள் இந்த மலைகளை தான் கடந்து செல்கிறது. 

வனவளம்:

  • வறண்ட பசுமை மாறா காடுகள், முட்புதர் காடுகள் போன்ற ஒன்பது வகையான காடுகள் இங்கு காணப்பட்டு வருகிறது. 
  • மேலும் அரிய வகை மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் மேலும் நறுமணப் பொருட்கள் இங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கின்றன.

கனிம வளம்: 

  • சுண்ணாம்பு கற்கள், பாக்சைட், இரும்புத்தாது போன்ற பல்வேறு வகையான கனிம வளங்கள் இங்கு அதிக அளவில் இருக்கின்றன. 


பழங்குடியின மக்கள்: 

  • இந்த மலைப்பகுதியில் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் இருப்பிடமாக உள்ளது. 
  • சவரா, கொண்ட டோரா, காடபா போன்ற பழங்குடியின மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். 

எதிர்கொள்ளும் சவால்கள்: 

  • காடுகள் அழிப்பு,வாழிடம் இழப்பு போன்ற சவால்களை இந்த மலைத்தொடர் எனது எதிர்கொண்டு வருகிறது.

Thursday, 4 September 2025

தமிழகத்தில் அதிக அளவு மழை பெறும் மாவட்டங்கள் மற்றும் பருவ மழையின் தாக்கம்

மழை: 

மனித வாழ்விற்கு மழை என்பது ஒரு முக்கிய தேவையாக இருந்து வருகிறது. அதில் நாம் தமிழ்நாட்டில் அதிக அளவு மழை பெய்யக்கூடிய மாவட்டங்களை பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்! ஒவ்வொரு மாவட்டங்களைப் பொறுத்து பருவ மழையானது மாறுபடுகிறது. இந்த பதிவில் நாம் எந்த மாவட்டங்களில் அதிக அளவு மழை பெறுகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாட்டில் அதிக மழை பெறும் மாவட்டங்களாக பருவ மழை மற்றும் புவியின் அமைப்பை பொறுத்து மாறுபட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. இதில் நாம் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று பொறுத்து மழை எந்தெந்த மாவட்டங்களில் எப்பொழுது பெய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்! 

தென்மேற்கு பருவ மழை: 

தென்மேற்கு பருவமழை பெறும் மாவட்டங்கள்:

  • நீலகிரி 
  • கோயம்புத்தூர் 
  • வால்பாறை 
  • தென்காசி 
  • கன்னியாகுமரி

உருவாகும் காலம்:

  • தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வரக்கூடிய மழைக்காலமாகும். இந்த தென்மேற்கு பருவக்காற்று பொருத்து அதிக மழை பெய்யக் கூடிய மாவட்டங்களை பார்ப்போம்..
  • நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் தென்காசி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் போன்ற பகுதிகளில் அதிக அளவு தென்மேற்கு பருவக்காற்றின் போது அதிக அளவு மழை பெய்கிறது. மேலும் இந்த மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யக் கூடிய சில பகுதிகள் இருக்கின்றன. 
  • நீலகிரி மாவட்டத்தில் தெவல்லா மற்றும் வால்பாறை அருகே உள்ள சின்ன கல்லாறு போன்ற பகுதிகளில் அதிக அளவு தென்மேற்கு பருவக்காற்று மழை பெய்து வருகிறது. இந்த இடங்களில் சுமார் 4000 முதல் 5000 மில்லி மீட்டர் வரை மழையின் அளவு இருக்கின்றன.

உருவாக்கம்:

  • தென்மேற்கு பருவமழை ஆனது அரபிக் கடலில் இருந்து உருவாகி மேற்கு தொடர்ச்சி மலையின் வழியாக நமது தமிழ்நாட்டிற்கு அதிக அளவு மழை கொடுக்கிறது.
  • இந்த தென்மேற்கு பருவமழை ஆனது முதலில் அரபிக் கடலில் இருந்து தென்மேற்கு நோக்கி காற்று வீசுகிறது இந்த மழையானது முதன் முதலில் கேரளாவில் இருந்து ஆரம்பிக்கிறது.
  • மேலும் இந்த மழை எனது மேற்கு தொடர்ச்சி மலையின் வழியாக இருக்கும் நீலகிரி கோயம்புத்தூர் மற்றும் வால்பாறை போன்ற இடங்களில் அதிக அளவு மழை பெய்கிறது.
  • இந்த தென்மேற்கு பருவ மழையின் மூலம் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்கள் காப்பி மற்றும் மிளகு தோட்டங்கள் வளர்ச்சிக்கு இந்த மழை எனது உதவியாக இருக்கிறது. 

பாதிப்புகள்:

  • பெரும்பாலான நேரங்களில் அதிக அளவு மழை பெறுவதன் மூலம் நீர் தேங்கி இந்த தாவரங்கள் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது. முக்கியமாக நீலகிரி வால்பாறை போன்ற இடங்களில் இருக்கின்றன.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளுக்கு பெருமளவில் தென்மேற்கு பருவமழை ஆனது அதிகளவு கொடுக்கிறது. 

வடகிழக்கு பருவமழை:

வடகிழக்கு பருவமழை பெறும் மாவட்டங்கள்:

  • சென்னை 
  • நாகப்பட்டினம் 
  • கடலூர் 
  • தர்மபுரி 
  • திருப்பத்தூர்

உருவாகும்  காலம்: 

  • இந்த வடகிழக்கு பருவமழை ஆனது அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரக்கூடிய பருவ மழையாகும். 
  • மேலும் இந்த வடகிழக்கு பருவ மழையானது வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து இந்த மழையானது ஆரம்பிக்கிறது.
  • வடகிழக்கு பருவ மழையானது சென்னை கடலூர் தென்காசி மற்றும் நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களுக்கு அதிக அளவு மழையை தருகிறது.
  • மேலும் இந்த வடகிழக்கு பருவமழை ஆனது உருவாகும் திசை வடகிழக்கிலிருந்து தெற்கு நோக்கி இந்த இந்தப் பருவ மழையானது ஆரம்பிக்கிறது.

 உருவாக்கம்:

  • வடகிழக்கு பருவக்காற்று என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மழை பெய்யக்கூடிய பருவ காலங்களாகும். 
  • வடகிழக்கு பருவக்காற்று என்பது அதிக அளவு மழை பெய்ய கடிய மாவட்டங்கள் நெல்லை மாவட்டம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் சேலம் மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு வடகிழக்கு பருவகாட்டின் போது மழையின் அளவு அதிகமாக இருக்கின்றன.
  • உதாரணமாக 2024 ஆம் ஆண்டின் போது நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 100 சதவீதம் மழை அதிகமாகி உள்ளது.
  • இந்தப் புருவியின் வட அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்கும் பொழுது காற்றானது தெற்கு நோக்கி வீசுகின்றது.
  • இதன் மூலம் வங்காள விரிகுடா கடலில் ஈரப்பதம் உருவாகி மேகங்கள் உருவாகின்றன.இதன் மூலமாக மழை பெய்கிறது.
  • மேலும் இந்த வடகிழக்கு பருவ மழையானது 60% மழை இந்த பருவத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.

பாதிப்புகள்:

  • மேலும் இந்த வடகிழக்கு பருவ மழையானது அதிகளவு பெய்வதன் மூலமாக நெல் வகைகள் கரும்பு வகைகள் மற்றும் சில காய்கறி வகைகள் போன்ற தாவரங்களுக்கு பெருமளவு சேதத்தை ஏற்படுத்துகிறது. 
  • இதில் முக்கிய மாவட்டங்களாக நாகப்பட்டினம் தஞ்சாவூர் தென்காசி போன்ற மாவட்டங்கள் அடங்கும். 

மேலும் சில சிறப்பு தகவல்கள்: 

  • பருவமழை என்பது இந்தியாவில் பருவநிலை அமைப்பில் ஒரு முக்கியமானதாக இருந்து வருகிறது. நமது தமிழ்நாட்டில் பருவமழை ஆனது இரண்டு வகைகளாக இருக்கிறது.
  • தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை என்று இரண்டு வகைகளாக இருக்கிறது. இந்த இரண்டு பருவ மழைகளும் எப்படி உருவாகிறது எங்கிருந்து வருகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்ப்போம். 
உங்களுடைய மாவட்டத்தின் பெயர் மற்றும் உங்கள் மாவட்டத்தில் எந்த பருவ மழை அதிகம் வருகிறது? கீழே கருத்துப் பக்கத்தில் தெரிவிக்கவும்!

மேற்கு தொடர்ச்சி மலை தொடர்-"இந்தியாவின் பசுமை வளத்தின் நெஞ்சு"

இந்தியாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் என்பது இந்தியாவின் பசுமை வளம் பருவ மழை மற்றும் புவியியல் பல்வேறு வகையான உயிரினங்களின் வாழ்விடம் என பல்வேறு வகைகளில் கூறலாம். இந்த மேற்கு தொடர்ச்சி மலையானது தமிழ்நாட்டின் இயற்கை வளங்களின் அழகாகவும் மற்றும் இந்தியாவின் உலக பாரம்பரிய சின்னமாகவும் இந்த மேற்கு தொடர்ச்சி மலையானது இருந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை பற்றிய ஒரு அறிமுகம்:

  • இந்த மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத் மாநிலம் முதல் கன்னியாகுமரி மாநிலம் வரை சுமார் 6 மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட மலைத்தொடராக இருக்கிறது. 
  • இந்த மாவட்டங்களில் தமிழ்நாடு இருக்கின்றன. இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன.
  • மேற்கு தொடர்ச்சி மலையின் நீளமானது சுமார் 1600 கிலோமீட்டர் தூரம் மேற்கு தெற்கு திசையில் இந்த மலைத்தொடர் ஆனது அமைந்துள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமுடி சிகரம் ஆனது தென்னிந்தியாவில் உயரமான சிகரமாக இருக்கிறது. இதனுடைய உயரம் சுமார் 2695 மீட்டர் ஆகும்.
  • தென்மேற்கு பருவக்காற்று ஆனது அதிக மழை உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பருவக்காற்றை தடுக்கும் பொழுது மேகங்கள் உருவாகி அதிகளவு மழையானது உருவாகின்றது. 
  • மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள யுனெஸ்கோ உலகில் உள்ள 8 பல் உயிர் வளங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
  • இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 
  • இதில் ஏறக்குறைய 139 பாலூட்டி வகை உயிரினங்கள் மற்றும் 508 பறவை வகைகள் 176 இரு வாழ்விகள் இருக்கின்றன. மேலும் இந்த வலையில் 5000க்கும் மேற்பட்ட சவர் வகைகள் இருக்கின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள்:

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • கோவா
  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு 
  • போன்ற மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை நெருங்கி இருக்கின்றது.
  • மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை பழனி மலை,நீலகிரி மலைத்தொடர், அகத்தியர் மலை,பாபநாசம்,மகேந்திரகிரி பொதிகை மலை போன்ற மலைத்தொடர்கள் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளாக இருக்கின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையின் பருவ மழையை பற்றிய விளக்கம்: 

  • மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரானது அரபிக்கடலில் இருந்து வரும் காற்றை தடுத்து மேகங்கள் உருவாகின்றன. இதன் மூலமாக மேற்குப் பக்கத்தில் உள்ள பகுதிகளில் அதிக அளவு மழையை ஏற்படுத்துகின்றன. 
  • இதன் மூலமாக வால்பாறை கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக அளவு மழையை கொடுக்கிறது.
  • மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தக்கான பீடபூமி பகுதிக்கு மழை குறைவாகவே இருக்கின்றன.
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்கள்: 
  • தாவர வகைகள்-இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் 5000 மேற்பட்ட தாவர வகைகள் தனிச் சறப்புகளைக் கொண்டு இருக்கின்றன.
  • விலங்குகள்-சுமார் 139 வகை பாலூட்டி உயிரினங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமாக இந்திய யானை புலி நரி போன்றவை முக்கிய இடமாக இருக்கின்றன.
  • பறவை வகைகள்- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 508 பறவை வகைகள் இருக்கின்றன இதில் பெரும்பாலானவை நீர் பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகும்.
  • இரு வாழ்விகள்-இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 176 வகை இரு வாழ்விகள் இருக்கின்றன. இதில் முக்கியமானவைகள் தவளைகள் மற்றும் நத்தைகள்.

சுற்றுலா இடங்கள் மற்றும் கலாச்சார இடங்கள்: 

  • சபரிமலை பழனி மலை மற்றும் அகஸ்திய மலை போன்ற மலைகள் சிறந்த கலாச்சார இடமாக இருந்து வருகின்றன. மேலும் இந்த சபரிமலைக்கு ஆண்டுதோறும் பல்வேறு வகையான பக்தர்கள் ஆன்மீகத்திற்காக வந்து செல்கின்றனர். 
  • மேலும் குற்றாலம் வால்பாறை மற்றும் உதகை மாவட்டத்தில் உள்ள இடங்கள் போன்றவை பசுமை வளங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கின்றன.
  • வரலாற்று முக்கியத்துவம்: இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செனசோயிக் காலத்தில் அதாவது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் இருக்கின்றன.
  • கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதியானது இந்தியா ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் போன்றவை நிறைந்திருந்த ஒரு காலமாக இந்த நிலப்பரப்பு இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலையின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம்: 

புவியியல் மற்றும் பரிமாண வரலாறு: 

கோண்டுவானா நிலப்பரப்பு:

  • இந்த நிலப்பரப்பானது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையானது சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டுவனா என்ற ஒரு பகுதி ஆனது பிளவுபட்ட இப்போது உருவான ஒரு நிலப்பகுதியாகும். 
  • இந்திய துணை கண்டம் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆகிய பகுதியிலிருந்து பிரிந்து ஆசிய பகுதியை நோக்கி நகர்ந்த போது இந்த மலையானது உருவானது. இதனாலேயே இந்த மலையானது இமயமலையை விட பழமையான மலை என கருதப்படுகிறது.

எரிமலை செயல்பாடுகள்: 

100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிகழ்ந்த எரிமலை செயல்பாடுகள் தக்காண பீடபூமியின் உருவாக்கம் மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியை அதிக அளவு பாதித்தன. இதனாலையே இந்த பகுதியில் பல எரிமலை எச்சங்கள் என்றும் இப்பகுதியில் காணப்படுகின்றன.

மனிதனின் நாகரிகம் மற்றும் கலாச்சார வரலாறு: 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு ஆண்டுகளாக பழங்குடி மக்கள் தாயகமாக இந்த மலைத்தொடர் இருந்து வருகிறது. வேட்டையாடுபவர்கள் ஆரம்ப கால விவசாயிகள் மற்றும் உணவு சேகரிப்பவர்கள் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் இருக்கின்றன. 

வர்த்தக பாதை: 

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கணவாய்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக பாதைகளாக இருந்து வந்தன. பாலக்காடு கணவாய் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. 

பழங்கால இடங்கள்: 

மேற்கு தொடர்ச்சி மலையில் பழங்கால கோயில்கள் குகைகள் மற்றும் கோட்டை பகுதிகளில் அமைந்துள்ளன. இவைகள் இப்பகுதியில் பலமான கலாச்சார வரலாறு மற்றும் அரசுகளின் ஆட்சியையும் குறிக்கின்றன.

பொருளாதாரம் மற்றும் சமூக வரலாறு: 

முந்தைய காலத்தில் பிரிட்டிஷ் ஆட்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் வளமான மண் வளங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றை சரியாக பயன்படுத்தி தேயிலை காபி ரப்பர் மற்றும் பல்வேறு வகையான வாசனைப் பொருட்களை தோட்டப்பயிராக பயிரிட்டு அவர்களுக்கு பயன்படுத்திக் கொண்டனர். 

நீர்வரத்து: 

மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவின் பல நதிகளின் உருவாக்கத்திற்கு பிறப்பிடமாக இருக்கின்றன. காவேரி கோதாவரி மற்றும் கிருஷ்ணா போன்ற முக்கிய நதிகள் எங்கிருந்துதான் உருவாகின்றன. இந்த முக்கியமான ஆறுகள் பல்வேறு வகையான குடிமக்களின் வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றன. 

பாதுகாப்பு வரலாறு: 

  • மேற்கு தொடர்ச்சி மலைகள் உலகில் எட்டு முக்கிய பல்வேறு பெருக்கு மையங்களில் ஒன்றாக யுனெஸ்காவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மலையாகும். இந்த மலைப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் உலக அளவில் முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. 
  • 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆனது காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக பல பாதுகாப்பு இயக்கங்கள் இருந்தன. குறிப்பாக "சைலன்ட் வேலி பாதுகாப்பு இயக்கம்" ஒரு முக்கிய அடையாளமாக இருந்து வந்தன. 
  • இந்த இயக்கங்கள் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு மற்றும் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றிய அவசியத்தை நிரூபித்தன.

சிறப்புரை: 

மேற்கு தொடர்ச்சி மலைகள் என்பது இந்தியாவின் இயற்கை வளம், கலாச்சாரம், புவியியல், பசுமை வளம் போன்றவற்றின் அடையாளமாக இருந்து வருகிறது. எனவே இதனை பாதுகாப்பது நம்முடைய பொறுப்பாகவும்.

"தமிழ்நாட்டில் கோடைகால சுற்றுலா - மலைகளும் நீர்வீழ்ச்சிகளும்"

அறிமுகம் :

நமது தமிழ்நாட்டில் கோடைகாலங்களில் பெரும்பாலும் மக்கள் வேலை செய்துவிட்டு விடுமுறை நாட்களிலும் தங்களது வீட்டிலேயே தங்களது நேரங்களை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டில் கோடை காலங்களில் நீங்கள் டிவி பார்ப்பது மொபைல் பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால் கோடைகாலத்தில் நீங்கள் குறைந்த செலவில் சுற்றி பார்ப்பதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. 

நீங்கள் உங்களுடைய பொன்னான நேரங்களை கோடை காலங்களில் நீங்கள் அங்கு போய் செலவழித்தால் உங்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கும். எனவே கோடை காலங்களில் தமிழ்நாட்டில் சுற்றி பார்க்க கூடிய சில அற்புதமான இடங்களை பற்றி இந்த பதிவில் காண்போம். 

மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுலா இடங்கள்:

ஊட்டி:

  • தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி பகுதியானது மலைகளின் ராணி என்று சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது. 
  • தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியானது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
  • இதனுடைய உயரமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2240 மீட்டர் ஆகும். 
  • இந்த ஊட்டி பகுதி எனது மிகவும் குளிர்ந்த கால நிலை மற்றும் தேயிலைத் தோட்டங்கள் மேலும் இங்குள்ள இயற்கை பகுதிகளானது பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தில் இருக்கின்றன. 
  • மேலும் ஊட்டியில் உள்ள ஏரிகள் அங்குள்ள பூங்காக்கள் மற்றும் ரோஜா தோட்டங்கள் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் மலர்கண்காட்சி மிகவும் அற்புதமாக இந்த ஊட்டி பகுதியில் இருக்கிறது.

ஊட்டியின் சிறப்புகள்: 

  • ஊட்டி ஏரி-இந்த ஊட்டி பகுதியில் உள்ள ஏரிகள் ஆனது மிகவும் படகு சவாரிக்கு பிரபலமான இடமாக இருந்து வருகிறது. கோடைகாலங்களில் நீங்கள் இங்கு சென்று படகு சவாரி செய்யும்போது உங்களை சுற்றி மிகவும் இயற்கை காற்று மற்றும் இயற்கை அழகுகள் போன்றவற்றை ரசித்துக்கொண்டே படகு சவாரி செய்யலாம். 
  • பூங்காக்கள்-ஊட்டி பகுதியில் உள்ள பூங்காக்கள் மிகவும் வண்ணமயமான மலர்கள் மற்றும் அங்குள்ள இயற்கை பகுதிகள் பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக அழகாக இருக்கும். 
  • நீலகிரி ரயில்-நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையம் ஆனது என ஸ்கோர் பாரம்பரிய பட்டியலில் உள்ள மலைப்பகுதியில் செல்லக்கூடிய ரயிலாகும். 
  • இந்த மலைப்பகுதி இடையில் செல்லக்கூடிய ரயில் பயணமானது சுற்றியுள்ள இயற்கை வளங்கள் மற்றும் சுற்றமான காற்று போன்றவைகள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் ஒருமுறையாவது நீலகிரி சென்றால் இந்த ரயிலில் பயணம் செய்து பாருங்கள். 
  • அழகிய தேயிலைத் தோட்டங்கள்-ஊட்டியில் உள்ள தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாகவும் புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்களுக்கு ஏற்ற இடம் ஆகும் இந்த செயலைத் தோட்டங்கள் மேலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இங்கு தேயிலைத் தோட்டங்களானது மிகவும் அழகாக இருக்கும். 

கொடைக்கானல்: 

  • இந்த கொடைக்கானலானது மலைகளின் இளவரசி என்று அன்போடு அழைக்கப்படுகிறது.
  • இந்த கொடைக்கானல் ஆனது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
  • இதனுடைய உயரமானது சுமார் 2133 மீட்டர் இருக்கின்றன.
  • இங்குள்ள கொடைக்கானல் ஏறி குறிஞ்சி மலர்கள் மற்றும் குளிர்ந்த வானிலை போன்றவை மக்கள் அனைவரும் விரும்பும் இடமாக இருந்து வருகின்றன. 
  • கொடைக்கானல் ஏரி-கொடைக்கானல் ஏறியானது நட்சத்திர வடிவில் இருக்கின்றன. மேலும் இந்த ஏரியில் படகு சவாரி செய்வதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். 
  • பேரிஜம் ஏரி-கொடைக்கானல் பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அமைதியை விரும்பும் நபர்கள் இங்கு சென்று உங்கள் நேரங்களை செலவிடலாம். 
  • தேவாரு வனப்பகுதி-இந்த வனப்பகுதியானது நூற்றுக்கணக்கான தேவார மரங்களை கொண்டுள்ளது. 
  • மேலும் இங்குள்ள குணா குகையானது மர்மங்கள் நிறைந்துள்ள குகை பகுதியாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் பல்வேறு வகையான இயற்கை சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. 
  • நீங்கள் மார்ச் முதல் மே மாதம் மற்றும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் சென்று சுற்றி பார்ப்பதற்கு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஏற்காடு: 

ஏற்காடு ஆனது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏற்காடு ஆனது இயற்கை வளங்கள் நிறைந்து மற்றும் இயற்கை காற்றுகள் மேலும் இங்கு பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. 

வால்பாறை: 

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள வால்பாறை தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு அழகான மலைப் பிரதேசம். 

கொல்லிமலை: 

இந்தக் கொல்லிமலையானது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த மலைப்பகுதியில் செல்லும் வளைவுகளும் இயற்கை அழகும் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும். 

மேகமலை: 

மேகமலையானது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடமாகும். மேலும் இது மேகங்களின் மழை என்றும் அழைக்கப்படுகிறது. 

குன்னூர்: 

ஊட்டி பகுதியில் அருகில் உள்ள இந்த இடமானது தேயிலை தோட்டங்கள் மற்றும் இயற்கை அழகுகளை ரசிப்பதற்கு ஏற்ற இடமாக அறியப்படுகிறது. 

தமிழ்நாட்டில் கோடை காலங்களில் சுற்றிப் பார்க்கக் கூடிய அற்புதமான நீர்வீழ்ச்சி பகுதிகள்: 

குற்றாலம்: 

நீங்கள் ஒரு முறை குற்றாலத்திற்கு கோடை காலங்களில் சென்றால் மிகவும் நல்ல அனுபவத்தை அந்த இடமானது உங்களுக்கு வழங்குகிறது. குற்றாலம் நீர்வீழ்ச்சியானது மூலிகை நேராக அறியப்படுகிறது. நீங்கள் ஒரு முறையாவது குற்றாலத்திற்கு சென்று ஒரு அனுபவத்தை பெற்று வாருங்கள். 

கோயம்புத்தூர் பகுதியில் உள்ள சிறுவாணி நீர்வீழ்ச்சி: 

கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியானது கோடை காலங்களில் போய் வெப்பத்தை தணிப்பதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. 

சுருளி அருவி: 

இந்த சுருளி அருமையானது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான அருவியாகும். மேலும் நீங்கள் இங்கு சென்றால் ஆன்மீகம் மற்றும் இயற்கை அழகு இரண்டையும் பார்த்துக்கொண்டு வரலாம். 

திற்பரப்பு அருவி: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த அருமையானது அமைந்துள்ளது. மேலும் இங்கு நீர்வீழ்ச்சிகள் படகு சவாரிகள் என்று பல்வேறு வசதிகள் இருக்கின்றன.

சிறந்த பயண நேரங்கள்: 

பொதுவாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த கோடை காலம் நீடிக்கிறது. இந்த காலங்களில் சமவெளி பகுதியில் அதிக வெப்பம் நிலவுகின்றன. எனவே நீங்கள் வெப்பத்தை தவிர்த்து பல்வேறு கோடைகால சுற்றுலா இடங்களுக்கு செல்ல விரும்புவீர்கள். அதற்கான நேரங்கள். 

மார்ச் முதல் ஏப்ரல்: 

நீங்கள் கோடை கால தொடக்க காலத்தில் காலநலை மிகவும் இதமாக இருக்கின்றன. எனவே இந்த காலங்களில் கூட்டம் மிகவும் குறைவாகவும் இருப்பதால் அமைதியாக சுற்றிப் பார்ப்பதற்கு நினைப்பவர்கள் இந்த நேரமானது அவர்களுக்கு அமைகிறது. 

மே :

இந்த மே மாதம் ஆனது கோடை கலங்களில் உச்சகாலமாகும். இந்த காலங்களில் பெரும்பாலான மக்களுக்கு விடுமுறை நாட்களாக இருப்பதால் மலைவாசல் தளங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் அதிக அளவு கூட்டமாக இருக்கின்றன. அப்படி இருந்தாலும் சுற்றுலா துறை மற்றும் அவர்களுடைய சிறப்பு ஏற்பாடுகள் போன்ற நிகழ்வுகளால் இது மிகவும் உற்சாகமாக மற்றும் சந்தோசமாக இருக்கும் காலமாக இருந்து வருகிறது. 

ஜூன்: 

இந்த மாதம் ஆனது கோடை காலத்தின் இறுதி மாதமாகும். மழைக்காலம் இங்கிருந்து ஆரம்பிக்கிறது. சில நேரங்களில் ஜூன் மாதங்களில் கூட மழை வருகிறது. அப்படி இருந்தாலும் பசுமையான மலைகள் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவற்றால் இந்த ஜூன் மாதமும் பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். எனவே கோடைகாலங்களில் நீங்கள் சுற்றுலா செல்வதற்கு முன்பாக சரியான முறையில் திட்டமிட்டு அதனை செயல்படுத்தி மிகவும் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

என்னுடைய பயண அனுபவம்: 

என்னுடைய பெயர் கார்த்திக் நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியந்தல் என்னும் சிறிய கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் முதன் முதலில் கோடைகாலத்தில் சுற்றி பார்த்த இடத்தைப் பற்றி மற்றும் என்னுடைய பயண அனுபவத்தை பற்றி இந்தப் பதிவில் கூறுகிறேன். 

தர்மபுரி மாவட்டம்: 

  • நான் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் என்னும் காவிரி ஆற்றின் நீர்வீழ்ச்சிக்கு தான் கோடைகாலத்தில் ஒரு முறை சென்றிருந்தேன். முதலில் நான் எங்கள் ஊரிலிருந்து எனக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கள் திருவண்ணாமலை ஊரிலிருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு சென்றிருந்தேன்.
  • தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஒகேனக்கல் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்று நான் அங்கிருந்து ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சென்றேன். நான் பேருந்தில் இருந்து ஒகேனக்கல் இறங்கியதும் அங்கு அதிகளவில் கடைகள் மற்றும் துணிக்கடைகள் என பல்வேறு கடைகள் இருந்தன. உணவு செய்வதற்காக மற்றும் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தங்கும் இடம் வசதி மற்றும் உணவு வசதி போன்ற வசதிகள் அங்கு சிறப்பாக இருக்கின்றன. 
  • உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் சென்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி சுற்றி பார்த்துவிட்டு உங்களுக்கு மிகவும் களைப்பாக இருந்தால் நீங்கள் தங்கி விட்டு வருவதற்கும் போதுமான வசதிகள் இருக்கின்றன. 
  • இந்த பயணம் ஆனது எனக்கு மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்களும் ஒருமுறை தர்மபுரி மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை சுற்றிப் பாருங்கள். அந்த நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அவர்கள் சமைத்து கொடுக்கும் மீன் மற்றும் சாப்பாடு போன்றவை மிகவும் அற்புதமாக செய்து தரப்படுகின்றன.

Friday, 8 August 2025

பருவத மலையின் மர்ம குகை - "நீங்கள் கண்டறிய வேண்டிய ஆன்மிக தலம்"

வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட பருவதமலை மலையில் அமைந்துள்ள ஒரு மர்ம குகை கோவிலைப் பற்றி பார்க்க போகிறோம். இந்த பதிவு நிச்சயம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும். ஆதலால் தொடர்ந்து படியுங்கள்.

பருவதமலை-தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் மூன்றாவது உயரமான மலை:

பருவதமலை திருவண்ணாமலை மாவட்டத்திலே அமைந்துள்ள மிக உயரமான மலையாக இருக்கிறது.கடல் மட்டத்திலிருந்து சுமார் 4560 அடி உயரமுடையது. பொதுவாக மலைகளை அல்லது சிகரங்களை அளவிடுவதற்கு கடல் மட்டத்திலிருந்து தான் அளவெடுக்கிறார்கள். ஏனென்றால் கடல்தான் தரையின் கடைசி அடித்தளமாக பார்க்கப்படுகிறது. கடலுக்கு கீழே ஒரு உலகம் இருக்கிறது. அதன் ஆழம் யாரும் அளவிட முடியாது. அதனால்தான் கடல் மட்டத்திலிருந்து மலைகளையும் குன்றுகளையும் மலைத்தொடர்களையும் சிகரங்களையும் குறிக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் மூன்றாவது உயரமான மலைமேல் சிவ தலம் அமைந்துள்ள மலையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பருவதமலை திகழ்கிறது. 

இந்த பருவதமலை மலை மேல் மல்லிகாஜூனர் பிரம்மராம்பிகை அம்மாள் ஆகிய தெய்வங்களின் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களை வந்து வழிபாட்டு செல்வதற்கும் இந்த மலைத்தொடர் ஏறுவதற்கு சுவாரசியமாகவும் ஒரு புது அனுபவத்தை தருவதனாலும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். 

மர்ம குகை கோவில்-ஆகாய கன்னி அம்மன் ஆண்டவர்:

அந்த வகையில் இங்கு பல பேர் அறியாத பருவதமலைக்கு மேல் அமைந்துள்ள ஒரு குகை கோவில் எங்கு உள்ளது என்றால் பருவதமலை கிரிவலப் பாதை 27 km நிலமுடையது. சுமார் 5000 பரப்பளவில் அகலமாக பரந்து விரிந்துள்ள பர்வதமலை  சுற்றி இருக்கின்ற கிரிவலப் பாதையை சுற்றி பல கிராமங்கள் அமைந்திருக்கிறது. அதில் கெங்கலமகாதேவி என்கிற கிராமத்தில் பால்கார் ராஜா என்பவரது வீட்டுக்கு அருகே உள்ள பருவதமலை காடு வழியாக உள்ளே  என்றால் இந்த குகைக்கோவிலை வந்தடையலாம். 

இந்தக் குகை கோவிலுக்கு "ஆகாய கன்னியம்மன் ஆண்டவர் குகைக்கோவில்" என்ற பெயர் உண்டு. கெங்கலமகாதேவி கிராமத்திலிருந்து இந்த கோவிலுக்கு வழி கேட்டால் அனைவரும் சொல்வார்கள். எதற்காக இந்த குகை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது பலபேரது கேள்வியாக இருக்கும். இந்த குகை கோவிலின் சிறப்பு இந்த குகை கோவிலை கட்டியது ஒரே ஒரு சாமியார் என்பதும் அந்த சாமியார் இப்பொழுதும் அந்த குகை கோவிலில் வாழ்ந்து வருகிறார் என்பதால்தான். ஆதலால் அந்த சாமியாரை பார்ப்பதற்கும் அந்த அற்புத குகை கோவிலை பார்ப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் முதல் கொண்டு பக்தர்கள் அனைவரும் இந்த கோவிலுக்கு படையெடுக்கிறார்கள். 

ஆனால் நிறைய பேருக்கு இந்த கோவிலுக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் இருப்பீர்கள். இன்னும் பர்வத மலையில் இப்படி ஒரு கோவில் இருக்கிறதா என்பதை நான் சொல்லும் போது கேட்டு அதிர்ச்சியாகி இருப்பீர்கள்!

 கங்காலமகாதேவி கிராமத்திலிருந்து பால்கார் ராஜா வீட்டுக்கு நேராக செல்லும் காடு வழியாக உள்ளே சென்றால் ஒரு ஐந்து மீட்டர் தொலைவில் திரிசூல வேப்பமர மாரியம்மன் கோவில் என்கிற கோவில் உள்ளது. இந்த கோவில் வெட்ட வெளியில் வேப்ப மரத்தின் அடியில் அமைந்துள்ளதால் பல பேருக்கு இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாமல் இருக்கலாம். பார்ப்பதற்கு அம்மன் கையில் இருக்கும் திரிசூலம் வடிவில் இந்த வேப்பமரம் அமைந்துள்ளது. இந்த வேப்ப மரத்தின் அடியில் அமைந்துள்ள இந்த கோவிலை இங்கு உள்ள கிராமத்து பொதுமக்கள் ஒவ்வொரு அமாவாசை தோறும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த திரிசூலம் வேப்பமரம் மாரியம்மன் கோவிலை வழிபட்டு விட்டு நேராக செல்லும் காட்டு வழியில் சென்று கொண்டே இருந்தால் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் அங்கு ஆகாய கன்னியம்மன் ஆண்டவர் கோவில் செல்லும் வழி என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். என் பக்கத்திலேயே ஒரு திரிசூலம் நிறுவப்பட்டு அதில் வளையல்கள் தொங்கவடப்பட்டிருக்கும்.

அதை பார்த்த பிறகு அப்படியே நேர் எதிராக மேற்கு நோக்கி செல்லும் வழியில் நடந்த சென்றால் அங்கிருந்து ஒரு அரை கிலோமீட்டர் குறைவான தொலைவில் குகைக்குள் அமைந்துள்ள இந்த மர்ம கோவிலை காணலாம். இந்தக் கோவில் இதற்கு முன்பு ஒரு குகையாக தான் காணப்பட்டது. 

குகை பற்றிய மர்மங்கள் மற்றும் வதந்திகள்: 

இந்தப் பகுதியில் உள்ள மக்கள் இந்த குகையை சுற்றி மலைப்பாம்புகள் வருவதாக கூறப்படுகிறது. 

அந்த குகையில் உள்ள சாமியார் எனக்கு கடவுளின் கிருபை உள்ளது என நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார் 

மேலும் பக்தர்கள் அனைவரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

கிராமத்து பொதுமக்கள் இந்த குகைக்குள் வந்து மழை நேரத்தில் தஞ்சம் அடைவார்கள். வனவிலங்குகள் இந்த குகையில் வாழ்ந்து வந்தன. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து சமீபத்தில் இந்த மலைக்கு வந்த குமார் என்கிற சாமியார் இந்த குகையை பார்த்து இதில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இந்த குகையில் பல அறைகளை உருவாக்கி ஒரு கோவில் போல கட்டி எழுப்பினார். இந்த குகைக்கு ஜன்னல் வாசல் அறைகள் கதவுகள் என அனைத்தும் வைத்து பார்க்க அற்புதமான ஒரு வீடு போல இந்த கோவிலில் உருவாக்கி அங்கேயே தங்கி வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். 

அவர் மட்டும் வாழாது நாய்கள் வளர்த்து ஆடு மாடுகளை வளர்த்து அங்கேயே மேய்த்துக்கொண்டு வருகிறார். தண்ணீருக்கு என்ன செய்வார் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அங்கே ஒரு பெரிய சுனை உருவாகி அதிலிருந்து தண்ணீர் ஓடையாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சுனையில் வெயில் காலம் குளிர் காலம் மழை காலம் என எந்த காலத்திலும் வழியாத வகையில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. 

அதுதான் இந்த சாமியாருக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. அதனால் தண்ணீருக்கு பிரச்சினை கிடையாது. அதிகப்படியான வெயில் காலத்தில் மட்டும்தான் தண்ணீர் சற்று பற்றி போக வாய்ப்புள்ளது தண்ணீர் பிரச்சனை வரக்கூடும். 

அந்த நேரத்தில் கீழே இருந்து கிராமங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தற்காத்துக் கொள்வார். வெயில் காலம் தெரிந்த பிறகு மீண்டும் பழையபடி சுனையில் தண்ணீர் சுரக்க ஆரம்பித்து விடும். ஆதலால் அங்கு வாழ்வதற்கு ஏற்ற தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. 

உணவுக்கு மட்டும் அரிசி பருப்பு என அனைத்து பொருட்களையும் கொண்டு சென்று அந்த குகை கோவிலில் வைத்துக் கொள்வார். உணவு தேவைக்கு அங்கேயே சமைத்து சாப்பிட்டு இப்போது வரை அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

நீங்கள் ஒரு முறை இந்த குகை கோவிலுக்கு வந்துவிட்டால் இங்கிருந்து திரும்பி செல்வதற்கு உங்களுக்கு மனம் இருக்காது. ஆடு மாடுகளை வளர்த்து செழுமையாக பார்த்துக் கொள்ளும் இவர் தேக்கு மரம் மாமரம் பாக்கு மரம், பாதாம் மரம் என பல வகையான மரங்களை வளர்த்து காட்டை பசுமையாக்கி வைத்திருக்கிறார்.

இந்த குகைக்கோவிலுக்கு ஒருமுறை சென்றால் இது காடா? அல்லது வீடா? என்பதே உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அந்த வகையில் ஒரே ஒரு சாமியார் மட்டும் இவ்வளவு பெரிய மாற்றத்தை இந்த குகையில் செய்திருக்கிறார். ஆதலால் பருவதமலை சுற்றி பார்க்க வரும் பக்தர்கள் இந்த கோவிலுக்கும் செல்ல மறந்து விடாதீர்கள். 

இது மட்டுமல்ல அது இந்த குகையை சுற்றி மலை பாம்புகள் சுற்றி வருவதாகவும் அந்த மலைப்பாம்புகள் இந்த சாமியார் வளர்க்கும் ஆடுகளை சிலதை நெருங்கி விட்டதாகவும் வதந்திகள் பரவுகிறது. இது உண்மையா என்று அந்த சாமியாரிடம் விசாரித்த போது அவரும் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். 

அதிர்ச்சியாகி நாங்கள் "பிறகு ஏன் நீங்கள் பயப்படாமல் இந்த இடத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள்? உங்களை இந்த மலைப்பாம்புகள் எதுவும் செய்து விடாதா?" என்று கேட்டதற்கு "அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது. எனக்கு கடவுள் கிருபை உள்ளது. ஆதலால் எனக்கு இங்கு வாழ்வதில் எந்த பிரச்சனையும் கிடையாது" என்று கூறினார். 

இவரது இந்த பேச்சை கேட்டதும் கீழே உள்ள கிராமத்து பொதுமக்கள் இந்த குகைக்கோவிலுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்கள். மலைப்பாம்புகள் பர்வத மலையின் அதிகமாக இருக்கின்றது; அதுவும் இந்த கோவிலை சுற்றி அதிகமாக இருக்கின்றது! என்பதை தெரிந்ததுதான் இந்த பயத்திற்கு காரணம்.

என்னதான் இந்த குகை கோவிலுக்கு மக்கள் வருவது பயம் என்றாலும் அதற்கு மாற்றாக பல பேர் வெளியூரிலிருந்தும் வந்து ஒவ்வொரு அமாவாசைப் பௌர்ணமி தினத்தன்று கோவிலுக்கு வந்து இங்குள்ள கன்னி அம்மன் தெய்வங்களை வழிபட்டு செல்கிகிலோமீட்டர்

70 வயது இந்த சாமியார் இன்றளவும் சுறுசுறுப்பாக மலைக்கு மேல் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அந்த குகை கோவிலில் வாழ்ந்து கொண்டு கீழே உள்ள கிராமத்திற்கு வருவதற்கு ஒரு சைக்கிளில் மலை மேலே இருந்து காடு வழியாக இரண்டு கிலோமீட்டர் ஓட்டிக்கொண்டு வந்து கிராமத்தை அடைகிறார். பிறகு அவருக்கு எந்த பொருள் தேவைப்பட்டாலும் கீழே இருந்து அவருக்கு அந்த பொருள்களைக் கொண்டு செல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றாலும் வேறு ஏதாவது பிரச்சனை தேவைப்படுகிறது என்றாலும் அவரை நேரடியாக மலைக்கு மேலே இருந்து கீழே வந்து பார்த்துக் கொள்வார்.

இன்று வரை தனிமையில் வாழும் இந்த சாமியார் மன்னித்து விடுங்கள் இவர் தனிமையாக வாழ வில்லை பல்லாயிரம் மரங்களோடும் ஆடு மாடுகள் நாய்களோடும் வாழ்ந்து வருகிறார். இவரை காணவாவது ஒருநாள் நீங்கள் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.