Monday, 8 December 2025

யாரும் அறிந்திடாத இமயமலை பற்றிய முழு தகவல்கள்

இந்தியாவில் உள்ள இமயமலையானது உலகிலேயே மிக உயரமான மடிப்பு மலை தொடராக இருக்கிறது. இந்த பதிவில் இமயமலை எப்படி உருவானது மற்றும் அதைப் பற்றிய சுவாரசியமான தகவலை பார்ப்போம்! 

இமயமலை உருவான விதம்: 

இமயமலை உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கோட்பாடு அதாவது ஆங்கிலத்தில் (Theory of Plate Tectonics). உலகில் சுமார் 40 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய தட்டு(Indian Plate) மற்றும் யுரேசிய தட்டு(Eurasian Plate) போன்ற இரண்டு பெரிய நிலப்பரப்புகள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டதன் மூலமாக இந்த மலைத்தொடரானது உருவாகியுள்ளது. 


இந்த நிகழ்வின் கால வரிசை மற்றும் செயல் முறையைப் பற்றி பார்ப்போம்! 

1. பாங்கேயா மற்றும் டெதிஸ் கடல்:

கிட்டத்தட்ட சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகில் உள்ள அனைத்து கண்டங்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே மாபெரும் கண்டமாக அதாவது பாங்கேயா(Pangaea) என்ற கண்டமாக இருந்தது. இந்த பாங்கேயா கண்டத்தைச் சுற்றிலும் பான்தலசா (Panthalassa)என்ற மாபெரும் கடல் இருந்தது.

பாங்கேயா கண்டம் பிளவு பட்டபோது வடக்கு பகுதி லாரேசியா எனவும் தெற்கு பகுதி கோண்டுவானாலாந்து எனவும் இரண்டு பகுதியாக பிரிந்தது. நமது இந்திய பகுதியானது தெற்கு பகுதியான கோண்டுவானாலாந்தில் இருந்தது.

இந்த இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையே மாபெரும் கடல் பகுதி ஒன்று இருந்தது. அந்த கடல் பகுதி தான் டெதிஸ் கடல் ஆகும்.

2. இந்திய தட்டின் நகர்வு:

சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தட்டானது கோண்டுவானாலாந்தில் இருந்து சற்று பிரிந்து வாடகைக்கு திசையை நோக்கி நகர்ந்து யுரேசிய தட்டை நோக்கி நகரத் தொடங்கியது. இந்த நகர்வானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது.

3. தட்டுகள் மோதல்: 

சுமார் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பாக வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய தட்டானது யூரேசியத் தட்டுடன் மோதியது.

இரண்டுமே கண்டத் தட்டுகள் என்பதால் இரண்டின் பாறை மிகவும் அடர்த்தியாக இருந்ததால் ஒரு தட்டு மற்றொன்றின் அடியில் செல்ல முடியவில்லை. இதன் மூலமாக மோதலின் அழுத்தத்தினால் இந்திய தட்டு யுரோசியத் தட்டு அடியில் தள்ளப்பட்டு டெதிஷ் கடலின் அடியில் இருந்த வண்டல் வடிவங்கள் மற்றும் பாறைகள் வலுவான சுருக்க விசைக்கு உட்பட்டன.

4. மடிப்பு மலைகளின் உருவாக்கம்: 

இந்த நிகழ்வின் மூலமாக சுருக்க விசை ஏற்பட்டு சுருக்க விசை காரணமாக வண்டல் பாறைகள் மெதுவாக மேல் நோக்கி மடிந்து மடிப்பு மலைகளாக உயர்ந்தது. இந்த உயர்ந்த மலைகளானது இமயமலை தொடராக உருவாகின. 

இந்த மலைகள் வெவ்வேறு கட்டங்களில் உயர்ந்து காணப்பட்டன. அதாவது சிவாலிக் மலைத்தொடர் இமயமலையின் மிக இளைய பகுதியாகும். 

இமயமலை என்றும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனுடைய உயரம் ஆண்டுகளுக்கு சுமார் 50 மில்லி மீட்டர் முதல் ஒரு சென்டிமீட்டர் வரை உயர்ந்து கொண்டே வருவதாக கணக்கிடப்பட்டு வருகிறது. 


இமயமலையில் உள்ள முக்கியமான பிரிவுகள்: 

இமயமலையானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் மூன்று முக்கிய இனை மலைத்தொடர்களாக உருவாகியுள்ளது. 

1) மலைத் தொடர் பெயர்: மாபெரும் இமயமலை

வேறு பெயர்: இமாத்திரி

இதனுடைய சராசரி உயரம்: 6000 மீட்டருக்கு மேலாக இருக்கிறது.

மலைத்தொடரின் முக்கிய அம்சங்கள்: 

உலகின் மிக உயரமான சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன. உதாரணமாக எவரெஸ்ட் சிகரம் கஞ்சன்ஜங்கா போன்ற பகுதியில் அமைந்துள்ளன. மேலும் இங்கு அதிக அளவில் நிரந்தர பனி உறைந்து காணப்படுகின்றன.

2) மலைத்தொடர் பெயர் : சின்ன இமயமலை

வேறு பெயர்: இமாச்சல மலைத்தொடர் 

இதனுடைய சராசரி உயரம்: சுமார் 3,700 முதல் 4500 மீட்டர் வரை இருக்கிறது. 

இந்த மலைத்தொடரில் முக்கிய அம்சங்கள்: 

அதிக சுகாதார விடுதிகளுக்கு பெயர் பெற்றது. உதாரணமாக சிம்லா டார்ஜிலிங். 

மேலும் பர்பஞ்சல் மற்றும் தௌலதார் போன்ற மலைத்தொடர்கள் உள்ளன.

3) மலைத்தொடர் பெயர்: வெளி இமயமலை 

வேறு பெயர்: சிவாலிக் மலைத்தொடர் 

இதனுடைய சராசரி உயரம்: சுமார் 900 முதல் 1100 மீட்டர் வரை இருக்கிறது.

மலைத்தொடரின் முக்கிய அம்சங்கள்

இமயமலையின் தென் மட்டமான மற்றும் இளைய பகுதியாக இது காணப்படுகிறது. மேலும் டூன்ஸ் என்று அழைக்கப்படும் பல தகவல்கள் இங்கு அதிக அளவில் காணப்பட்டு வருகின்றன.

இமயமலையின் முக்கியத்துவங்கள்

காலநிலை: 

மத்திய ஆசியாவில் இருந்து வரும் அதிக குளிரான காற்று இந்தியாவிற்குள் நுழைவதை தடுத்து இந்திய துணை கண்டத்தின் காலநிலையை மிதமாக பராமரிக்க இமயமலையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. 

மழை பொழிவு: 

தென்மேற்கு பருவக்காற்று களை இமயமலையானது தடுத்து நிறுத்தி இந்தியா முழுவதும் கனமழையை கொண்டு வர காரணமாக இருக்கிறது. 

நதிகள்: 

கங்கை,சிந்து மற்றும் பிரம்மபுத்திரா போன்ற வற்றாத நதிகள் இமயமலையின் பணிப்பாறைகளில் இருந்து தான் உருவாகி வட இந்திய சமவெளிகளுக்கு வளமான மண்ணையும் நீரையும் அதிக அளவில் கொண்டு சேர்க்கிறது. 

இயற்கை அரண்: 

இந்தியாவுக்கு வடக்கே இயற்கையான மற்றும் வலிமையான இலையை இமயமலையானது கொண்டுள்ளது. 

உயிர்கள்: 

இமயமலையானது பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாக அமைந்து வருகிறது. 



  • மேலும் இமயமலையானது இந்தியாவின் புவியியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையானது இந்தியாவுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது. 
  • மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளிலிருந்து அதிகளவு மக்கள் இமயமலையை சுற்றி பார்க்கவும் அந்த இடத்தில் வாகனங்களில் மூலம் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். 
  • இந்த இமயமலை பயணம் அனுபவமானது அதிக அளவு மனிதர்களுக்கு இயற்கையின் மீதான தாக்கத்தை ஏற்படுத்திய வருகிறது. இமயமலையானது மிகவும் அழகானதாகவும் அதிக அளவு குளிர் நிறைந்த பகுதியாகவும் காணப்பட்டு வருகிறது. 
  • மேலும் இமயமலையின் மீது பெரும்பாலான மனிதர்கள் அதன் உயரத்தை எட்டி இமயமலையின் மீது அவர்களுடைய நாட்டின் கொடிகளை நட்டு வைத்து விட்டு வருகின்றனர். இந்த அனுபவமானது மிகவும் சுவாரஸ்யமாகவும் இந்த பயணம் ஆனது மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். 
  • எனவே மனிதர்கள் இந்த இமயமலை பகுதிக்கு செல்லும் போது அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக செல்ல வேண்டும்.



Comments


EmoticonEmoticon