பர்வதமலைக்கு செல்லும் வழிகள் எத்தனை தெரியுமா?

நமது பர்வத மலைக்கு சுற்றுலா பயணமாக வரும் பக்தர்கள் மலைக்கு மேல் செல்வதற்கு எந்த வழிகள் இருக்கிறது என்று குழப்பத்தில் உள்ளார்கள். அவர்கள் இனி கவலைப்பட தேவையில்லை இந்த பதிவில் பர்வதமலைக்கு செல்லும் வழிகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண்போம். 

பொதுவாக பருவத மலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட தென்மகா தேவமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் பருவதமலை  மலை ஏற்ற பாதைக்கு சென்றுவிடலாம்.



அங்கு செல்வதற்கு ஐந்து நிமிடம் தான் ஆகும். நடந்தே சென்றுவிடலாம். 
ஆனால் நிறைய ஆட்டோ ஓட்டுநர்கள் பக்தர்களை ஏமாற்றி ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் நடக்க முடியாதவர்களை மயக்கி ஒரு ஆளுக்கு 20 ரூபாய் என்ற வீதம் மிக தொலைவு செல்வது போல் இந்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கடந்து சென்று மலையேற்ற பாதை அருகில் விடுவதற்கு அதிக பணம் வாங்குகிறார்கள். 


அவர்களும் வேறு வழியில்லாமல் பருவதமலை செல்லும் பக்தர்களையும் பட்டியந்தல் கட்டு கட்டும் இடத்திற்கு செல்லும் பக்தர்களையும் ஏற்று இறக்கி விடுவதையே நம்பி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பட்டியந்தல் கட்டு கட்டும் இடத்திற்கு செல்வதற்கு நியாயமான ஒரு ஆளுக்கு 20 ரூபாய் என்ற கணக்கு செல்லுபடி ஆகும்.


ஆனால் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே அமைந்துள்ள பருவதமலை மழையாற்ற பாதைக்கு செல்வதற்கு தெரியாதவர்களிடம் இவ்வளவு தொகை வாங்குவது முற்றிலும் தவறானது. சொந்த ஊருக்காரன் என்ற முறையில் எனக்கும் அவர்களுக்கும் தெரியும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு தான் என்று. ஆனால் புதிதாக மலை ஏற வருபவர்கள் மிக நீண்ட தொலைவு செல்ல வேண்டி இருக்கும் என்ற நம்பிக்கையில் ஏமாந்து ஆட்டோவில் ஏறி பணத்தை பறிக்கொடுக்கிறார்கள். 

ஆதலால் ஆட்டோ ஓட்டுநர்கள் மக்களிடம் கொள்ளைப் பணம் வாங்குவதை விட்டு வட்டு நியாயமான பணத்தை வாங்கித் தொழில் நடத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல பக்தர்கள் அனைவருடைய வேண்டுகோளும் கூட..

நடக்க முடியாதவர்கள் குழந்தைகள் வயதானவர்கள் ஊனமுற்றோர்கள் மாற்றுத்திறனாளிகள் வேறு வழியில்லாமல் ஆட்டோவில் தான் செல்ல வேண்டிய நிலை இருக்கும். இங்கிருந்து மலையேற்ற பாதைக்கு உங்களால் நடக்க முடியவில்லை என்றால் மலை மீது இரண்டு மணி நேரம் எப்படி நடக்கப் போகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

இந்த தென்மகாதேவமங்கலம் வழியே செல்லும் மலை ஏற்ற பாதை மூலமாக போளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வரும் பக்தர்களும் திருவண்ணாமலையிலிருந்து ஒரு பக்தர்களும் வேறு சில பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள் ஒன்றாக கூடுகிறார்கள். இந்த வழியாக செல்கிறார்கள். 



ஆனால் இதே போல கடலாடி வழியும் பருவதமலை ஏறுவதற்கு பயன்படுகிறது. அதற்கு திருவண்ணாமலையில் இருந்து தென் மகாதேவ மங்கலம் வரும் வழியில் கடலாடி என்கிற கிராமம் உள்ளது. அங்கே பருவதமலை செல்லும் வழி என்று சாலையிலே ஒரு அறிவிப்பு பலகை இருக்கும். அதை பார்த்துவிட்டு அந்த வழியே சென்றால் செல்லும் வழியில் ஒரு ஆசிரமம் வரும் அதற்கு நேரு பருவதமலை மலை ஏற்ற பாதை வழியாக மலையேற ஆரம்பித்து விடலாம்.

கடலாடி வழியில் இருந்து பருவதமலை ஏறுவதும் தென்மகாதேவமங்கலம் வழியிலிருந்து பருவதமலை ஏறுவதும் மேலே ஓரிடத்தில் ஒன்றாக கூடும். அங்கிருந்து இரண்டு வழியில் வந்தவர்களும் ஒன்றாக பயணிக்க வேண்டி இருக்கும். இதுதான் தற்போது வரை உள்ள அனைவருக்கும் தெரிந்த பருவதமலை மலையேற்ற பாதைகளுக்கான வழிகள். 

ஆனால் பருவதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு காடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் புகுந்து பருவதமலை மலையேற்ற பாதைக்கு நேரடியாக வந்துவிட முடியும். அதற்கான வழிகள் நிறைய அவர்கள் கிராமங்களில் இருந்து செல்கிறது. அதன் வழியாக சுற்றுவட்டார கிராமத்தினர் மலை மீது ஏறி வந்துவிடுவார்கள்.

ஆக மொத்தத்தில் பருவதமலை ஏறுவதற்கு அதிகாரப்பூர்வமாக இரண்டு வழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அவை என்னவென்றால் ஒன்று தென் மகா தேவமங்கலம் வழியில் பர்வதமலை ஏற முடியும். மற்றொன்று கடலாடி வழியே பருவதமலை ஏற முடியும். இந்த இரண்டு வழிகள் மட்டுமே பக்தர்கள் அதிகமாக பருவதமலை மலையேறி வருகிறார்கள். 

எனக்கு தெரிந்து இந்த இரண்டு வழிகளில் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பயணம் தென்மகா தேவமங்கலம் வழிதான். இந்த வழியில் செல்வதால் பல கோவில்கள் வழிபட்டுக்கொண்டு செல்ல முடியும். ஆனால் கடலாடி வழியில் ஒன்று இரண்டு கோவில்கள் மட்டுமே இருக்கும். ஆதலால் நான் பக்தர்களுக்கு பரிந்துரைப்பது தென்மாதிமங்கலம் வழிதான். 

Post a Comment

Previous Post Next Post