கோடை விழாவானது ஜமுனா மரத்தூரில் வெகு சிறப்பாக இரண்டு நாட்கள் நடத்தப்படும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இது ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. இந்தக் கோடை விழாவானது வெகு விமர்சனமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோடை விழாவானது ஜமுனா மரத்தூர் மலைப்பகுதியில் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடத்தப்படக்கூடிய ஒரு சிறப்பான கலாச்சார மற்றும் சுற்றுலா விழாவாகும்.
இந்தக் கோடை விழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் ஒரு விழாவாகும். இந்தக் கோடை விழாவின் மூலம் ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் அவர்களை பற்றி பேசப்படுகிறது. இந்த ஜவ்வாது மலையானது திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான மலைத்தொடர் ஆகும்.
![]() |
ஜவ்வாது மலை கோடை விழா 2025 |
இந்த மலைத்தொடர் இயற்கை நமக்கு கொடுத்த ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. எனவே இதனை நாம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் தேவையற்ற குப்பைகளை இந்த பகுதியில் போட வேண்டாம்.
சிறப்பம்சங்கள்:
மலர் கண்காட்சி:
- நமது கண்களை கவரக்கூடிய வகையில் சிறிய மலர்கள் முதல் பெரிய மலர்கள் வரை மிகவும் வண்ணமயமான மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.
- இது பார்பவர்கள் கண்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.
பண்பாட்டு நிகழ்ச்சிகள்:
- இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- இந்த நிகழ்ச்சியில் நடனம் இசை மற்றும் பண்பாட்டு வீர விளையாட்டுகள் போன்றவை வெகு சிறப்பாக கோடை விழாவில் நடைபெறுகின்றன.
- அங்குள்ள பழங்குடியின மக்கள் மலைவாழ் மக்கள் போன்றவர்கள் தங்களுடைய கலைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணமாக இந்த கோடை விழாவானது அமைந்திருக்கிறது.
உணவு கண்காட்சி:
- உணவு கண்காட்சியில் பண்டைய காலங்களில் செய்யக்கூடிய உடலுக்கு மிகவும் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவு வகைகள்.
- இந்த பகுதியிலேயே தயாரித்து கோடை விழாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
சுற்றுலா பயணம்:
- இந்தக் கோடை விழாவில் சுற்றுலா பயணமாக படகு சவாரி முக்கிய பங்கு வகிக்கிறது.
- நீங்கள் படகு சவாரி செய்ய வேண்டுமென்றாலும் இங்கு செய்யலாம்.
- மேலும் இங்கு பல்வேறு வகையான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
- சிலம்பம், மேஜிக் ஷோ போன்றவையும் நடைபெறுகின்றன.
கைவினைப் பொருள்கள் கண்காட்சி:
- இங்குள்ள மக்கள் மாணவர்களுக்கான சிறிய சிறிய கைவினைப் பொருட்கள் தங்கள் கையால் செய்து விற்பனைக்கு வைத்துக்கொண்டு இருப்பார்கள்.
- மேலும் பலா பழம் சீதாப்பழம் தேன் மூலிகை சாறு மரத்தில் செய்யப்பட்ட சிற்பங்கள் மற்றும் மஞ்சள் போன்ற இயற்கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
பொதுப்பணிகள்:
- இந்த மலைப்பகுதியில் சாலை திட்டங்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் சில வசதிகளை செய்து தருவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகின்றன.
- மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இந்தக் கோடை விழாவில் அமைச்சர்கள் சுற்றுலாத்துறை அலுவலர் ஆகியவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மேலும் இந்தக் கோடை விழாவினை நீங்கள் நேரில் காண ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனா மரத்தூர் பகுதியில் வருடம் வருடம் நடைபெறுகிறது எனவே நீங்கள் நேரில் வந்து கண்டு இந்தக் கோடை விழாவினை மகிழ்ச்சியோடு உங்கள் நேரங்களை செலவிடுங்கள்!