பர்வத மலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மலைமேல் அமைந்திருக்கும் தெய்வங்கள் யார் யார் என்று தெரிந்திருக்கும். ஆனால் புதிதாக பர்வத மலைக்கு வர நினைக்கும் பக்தர்கள் அல்லது வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பர்வத மலையில் என்ன தெய்வங்கள் இருக்கிறது என்று தெரியாமல் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் விரிவாக காண்போம்..
பர்வதம் என்றால் மழை மழை என்றால் மழை ஆக மொத்தத்தில் மலைகளுக்கு எல்லாம் மழை என்று பொருள்படும் நமது பர்வத மலையில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. பண்டைய காலத்தில் நன்னன் என்ற குறுநில மன்னன் கோட்டை கட்டி ஆண்டு வந்த பருவதமலை உச்சியில் தற்போது கோவில் கட்டி மக்களை வழிபட்டு வருகிறார்கள். இன்றளவும் கோட்டை இருந்ததற்கான அடையாளச் சான்றுகளும் வரலாற்று சான்றுகளும் மலை மேல் நிறைந்துள்ளது.
பருவதமலை மேல் உள்ள கடவுள்கள் யார் யார் என்றால் சிவன் பார்வதி வடிவத்தில் மல்லிகார்ஜுனர் பிரம்மராம்பிகை அம்பாள் இருவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4560 அடி உயரம் உள்ள நமது பர்வதமலை தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய சிவன் வாழும் சிவ தலமாக இருக்கிறது. திருவண்ணாமலையில் மிகவும் உயரமான மலை என்று போற்றப்படுகிறது.