பருவத மலைக்கு சுற்றுலா பயணம் வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து தான் அதிகமாக வருகிறார்கள். மக்களுக்கு ஆன்மீகம் மீதான நம்பிக்கை அளப்பரியது. அதை நிரூபிக்கும் விதமாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் பருவதமலை ஏறி இறங்குகிறார்கள். ஏறுவதற்கு ஒன்றரை மணி நேரம் இறங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் என்ற எடுத்துக் கொண்டாலும் கிட்டதட்ட ஐந்து மணி நேரம் மலை ஏற்ற நேரமாக இருக்கும்.
அந்த நேரத்திற்கான உடல் வலிமையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் இறைவன் மல்லிகார்ஜுனர் பிரம்மராம்பிகை அம்பாளை பக்தர்கள் மனமார வழிபட்டு திருப்தியுடன் அவரவர் இல்லங்களுக்கு செல்கிறார்கள்.
இந்த பதிவில் சென்னையில் இருந்து நமது பருவத மலைக்கு வருவதற்கான வழிகள் என்னென்ன உள்ளது? என்னென்ன பேருந்து வழித்தடங்கள் இருக்கின்றன என்பதை விளக்கமாகக் காண்போம்.