பருவதமலையை சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பில் சாதனை! 10th exam results 2025

மே 16 2025 வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஒன்றாக வெளியானது. இதனால் மாணவர்கள்  பரபரப்பாக தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டார்கள். மாணவர்கள் அனைவரும் இந்த தருணத்திற்காக தான் அதிக அளவு ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். மாணவர்கள் எதிர்பார்த்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தன.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் பருவதமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யாருமே பெற்றிடாத மதிப்பெண்களை பருவதமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள கெங்கலமகாதேவி கிராமத்தில் மீனா என்பவரின் மகள் தரணி என்கிற மாணவி பத்தாம் வகுப்பு 500 மதிப்பெண்களுக்கு 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்து சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் மாணவிகள் யாரும் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றதில்லை என்பதை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தது ஒரு ஏழை குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதும் பாராட்டுதலுக்குரியது. உங்களின் குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தாலும் நீங்கள் உங்களுடைய படிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இப்போதுள்ள பிள்ளைகள் படிக்க சொன்னால் படிக்காமல் ஊர் சுற்ற செல்வார்கள் ; அல்லது டிவி, செல்போன் பயன்படுத்தி வீண் கேளிக்கைகளுக்கு நேரத்தை வீணடிக்கிறார்கள். 

பொதுவாக பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்ப ஆகதையே விரும்புவார்கள். ஏனென்றால் அரசு பள்ளியில் கல்வி தரம் இல்லை என்ற காரணத்தினால் தனியார் பள்ளியில் கல்வி தரமாக உள்ளது என்று நம்புகிறார்கள். அதற்கு சான்றாக நிறைய அரசு அலுவலர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் தான் சேர்கிறார்கள். 

இப்படி இந்த கேடுகெட்ட ஆட்சியில் அரசு பள்ளியில் அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்து போக மாணவர்கள் தரமற்ற மாணவர்களாக உருவாகி வருகிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கம் இல்லாமலும் ஆசிரியர்களுக்கு அடிபணியாமல் மரியாதை இல்லாமல் செயல்படுவதாகவும் நிறைய புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. 

இதன் காரணமாகவே தங்களுக்கு பிள்ளைகள் ஒழுக்கமாற்று போகாமல் இருக்க பெற்றவர்கள் அரசு பணியை சேர்ப்பது தவிர்க்கிறார்கள். இருந்தபோதிலும் வசதி வாய்ப்பு இல்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்னமும் அரசுப் பள்ளியில் தான் நம்பி சேர்க்கிறார்கள். அந்த குழந்தைகளும் தங்களின் பெற்றோரின் கனவை நிறைவேற்றுவதற்காகவும் குடும்ப கஷ்டத்தை சுமந்து கொண்டு கஷ்டப்பட்டு படித்து  இந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.

படிக்கிற பிள்ளை எங்கு சேர்த்தாலும் படிப்பார்கள் என்பதற்கு தரணி போன்ற மாணவிகள் மாணவர்கள் ஒரு எடுத்துக்காட்டு தான்.

தனியார் பள்ளிகள் சேர்த்தால் தான் படிக்க முடியும் என்கிற கட்டாயத்தில் இருந்து சிறுவயதில் இருந்து தந்தை இல்லாமல் தாய் அரவணைப்பில் கஷ்டப்பட்டு அரசு பள்ளியில் படித்தே தரணி என்கிற மாணவி போராடி படித்து இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருப்பது பாராட்டக்கூடிய செயலாகும்.

நிறைய செய்தி ஊடகங்கள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையே குறிவைத்து தேடி சென்று பேட்டி எடுத்து அவர்களை மட்டும் மக்களுக்கு தெரியப்படுத்தி வாழ்த்தி வருகிறார்கள். ஆனால் இது போல சிறு சிறு கிராமங்களில் நகரங்களில் எளிய குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. மாணவர்கள் எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்களுக்கு நாம் உற்சாகப்படுத்தும் போது அவர்களுக்கு அதிக அளவு படிப்பின் மீது மேலும் ஆர்வம் தோன்றுகிறது. ஆகவே படிப்பில் மட்டுமல்ல எந்த துறையில் சாதித்தாலும் அனைவரையும் நாம் ஊக்கப்படுத்தி அவர்களை நாம் மென்மேலும் வளர வழி வகுக்க வேண்டும்.

ஆதலால் நமது பருவதமலையை சேர்ந்த மாணவி தரணி சாதித்து இருப்பது பற்றி நாம் பேசாமல் வேறு யாரும் பேச போகிறோம். 

மாணவி தரணி 500 மதிப்பெண்களுக்கு 16 மதிப்பெண்கள் மட்டுமே தவறவிட்டிருக்கிறார். மற்றபடி அனைத்து பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மிகாமல் பெற்று அறிவியல் பாடத்தில் சதம் (100/100) அடித்துள்ளார். இந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெற்றிருப்பது சாதாரண மாணவர்களால் கண்டிப்பாக முடியாது. 

படிப்பு மீது ஆர்வமுள்ள குடும்ப சூழ்நிலை உணர்ந்த மாணவ மாணவிகளால் மட்டுமே இந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும். உங்களுக்கு படிப்பதை உங்களுக்கு ஆர்வத்தோடும் தெளிவோடும் மிகவும் கவனத்தோடும் தொடர்ந்து படித்து வாருங்கள். நீங்களும் இந்த மாணவியை போலவே அதிகமாக மதிப்பெண்கள் பெற்று உங்களுடைய ஊருக்கு பெருமை சேர்த்து தர வேண்டும். நீங்கள் இருக்கும் மதிப்பெண்கள் ஆனது உங்களுடைய பெற்றோருக்கு அதிகளவு மகிழ்ச்சியையும் பெருமையும் தேடிக் கொடுக்கிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்காகவும் உங்களுடைய பெற்றோர்கள் மனது நிறைவு அடையும் வகையில் அவர்களுக்கு பெருமை சேர்த்து தர வேண்டும். நீங்கள் உங்களுடைய பெற்றோர்களை எந்த சூழ்நிலையிலும் அவர்களை நீங்கள் கைவிடக்கூடாது. உங்களுக்கு முதல் கடவுள் பெற்றோர்கள் தான் எனவே அவர்களை நீங்கள் காயப்படுத்தாமல் அவர்களுக்கு நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்க வேண்டும்.

தங்கள் கிராமத்தை சேர்ந்த மாணவி தரணி பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததை கொண்டாடும் விதமாக கெங்கலமகாதேவி கிராமத்து இளைஞர்கள் மாணவி தரணியின் குடும்பத்துடன் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனவே வாழ்க்கையில் சாதிக்கும் அனைவரையும் நாம் அதிக அளவு உற்சாகப்படுத்தி அவர்களை மென்மேலும் வாழ்க்கையில் உயர்வதற்கு நாம் வழி காட்ட வேண்டும். ஆகவே உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வதற்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்களும் செய்யுங்கள். அவர்களின் வாழ்க்கையை உயர்வதற்கு அவர்களுக்கு நீங்கள் அடிக்கடி உத்வேகம் கொடுக்க வேண்டும்.

அவர்களிடம் கேட்டபோது "எங்கள் ஊரைச் சார்ந்த  மாணவி தரணி பத்தாம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதனால் கண்டிப்பாக அந்த மாணவியை பாராட்டியாக வேண்டும் என்று இந்த முயற்சி செய்தோம்; இது போல ஒவ்வொரு ஊர் மக்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் இணைந்து தங்கள் ஊர்களில் வெற்றி பெற்ற மாணவர்களை  ஊக்கப்படுத்துவதால் அவர்களது மேற்படிப்புக்கு இந்த ஆதரவு உதவியாக இருக்கும்.  அது மட்டுமல்லாமல் இவர்களைப் போன்று படிக்க வேண்டும் என்று மற்ற மாணவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்; எனவே ஒவ்வொருவரும் இதுபோல தங்கள் ஊரில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்" என்று கூறினார்கள். நீங்களும் இந்த மாணவியை போலவே நன்றாக படித்து நீங்களும் உங்களுடைய பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உங்களுடைய ஊருக்கு மற்றும் உங்களுடைய குடும்பத்திற்கு நீங்கள் பெருமையைத் தேடித் தர வேண்டும். எனவே முயற்சி செய்து படித்தால் நீங்கள் எவ்வளவு மதிப்பெண்கள் வேணாலும் பெறலாம் என்பதற்கு இந்த மாணவி ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் நீங்கள் உங்களின் குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தாலும் நீங்கள் உங்களுடைய படிப்பில் இருந்து கவனம் சிதறாமல் நீங்கள் கவனமாக படித்து தேர்வில் அதிக அளவு மதிப்பெண்களை பெற்று மேலும் உயர்கல்விகளை சிறப்பான பிரிவை எடுத்து நீங்கள் அதில் அதிக மதிப்பெண்களை பற்றி நீங்கள் கல்லூரியில் சேர்ந்து நல்ல எதிர்காலத்தை நீங்கள் உங்களுக்கு அமைத்துக் கொள்வதற்கு இந்த மதிப்பெண்களானது உங்களுக்கு ஒரு உதவியாக இருக்கும். எனவே அனைவரும் நன்றாக படியுங்கள். நீங்கள் கல்வி பயில்வது என்பது உங்கள் வாழ்க்கையின் முடியும் வரைக்கும் உங்கள் உடனே இருக்கிறது. எனவே நம்மிடமிருந்து அனைத்தையும் மற்றொருவர்கள் எடுத்துக் கொண்டால் கூட நம்முடைய கல்வியை நம்மிடம் இருந்து யாராலும் எடுக்க முடியாது. எனவே அனைவரும் மென்மேலும் நன்றாக படித்து வாழ்க்கையில் ஒரு நல்ல பதவிக்கு செல்ல வேண்டும். மனிதராக பிறந்த நாம் அனைவரும் நம்முடைய வாழ்க்கை முடியும் வரையில் நாம் மிகவும் மரியாதையாக வாழ வேண்டும். எனவே இந்த கல்வி எனது உங்களுக்கு அந்த மரியாதை பெற்று தருகிறது. ஆகவே நீங்கள் நன்றாக படித்து அனைவரும் மதிக்க கூடிய வகையில் நீங்கள் ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும். உங்களுக்கு எவ்வளவு தோல்விகள் வந்தாலும் நீங்கள் உங்களை தளர விடக்கூடாது. நீங்கள் அடுத்தடுத்த முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். கண்டிப்பாக ஏதாவது ஒரு காலத்தில் உங்களுக்கு வெற்றி நிச்சயமாக கிடைக்கும். எனவே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post