திருவண்ணாமலையில் பல்வேறு இடங்கள் நாம் போகாமல் இருப்போம் அதில் முக்கியமான சில இடங்கள் பார்ப்போம்! திருவண்ணாமலையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஆன்மிகம் இயற்கை வளம் மற்றும் கோயில்கள் என்றுப் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.
திருவண்ணாமலையில் உள்ள ஆன்மீக தலங்கள்:
அருணாச்சலேஸ்வரர் கோயில்:
- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலானது மிகவும் பிரபலமான ஒரு கோயில் ஆகும்.
- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவில் ஆகும். இங்கே தினமும் பக்தர்களுக்கு இலவச உணவு மூன்று வேளையும் வழங்கப்படுகிறது.
- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மட்டுமல்ல இதே போல அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழனி முருகன் கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்களிலும் தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கும் மக்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது.
- திருவண்ணாமலை என்று கூறினாலே உங்களுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தான் முதலில் ஞாபகம் வரும். இந்த அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மூலவர்களாக அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் அமைந்திருக்கிறார்கள்.
- இந்த புனித தளமானது ஒரு அக்னி பஞ்சபூத தலமாக உள்ளது. அதாவது பூமியில் உள்ள சிவ தலங்களில் அக்னி தலங்களாக அதாவது பஞ்சபூதங்களில் ஐம்பெரும் சக்திகளான நீர், நிலம், காற்று, ஆகாயம், தீ என்கிற சக்திகளில் அக்னி தளமாக திருவண்ணாமலை அண்ணாமலை திகழ்கிறது. இது ஒரு பிரம்மாண்டமான கோயில் ஆகும்.
- இந்த கோயிலை சுற்றி அனைவரும் விசேஷ நாட்களில் கிரிவலம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.
- எனவே நீங்கள் ஒரு தடவையாவது இந்த அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று வாருங்கள் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும்.
- இந்த கோயிலை சுற்றி 8 லிங்கங்கள் இருக்கின்றன. நீங்கள் இந்த திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றும் பொழுது இதனை காண்பீர்கள்.
- திருவண்ணாமலை கிரிவலம் 14 கிலோமீட்டர் தூரம் உடையது. ஆதலால் நீங்கள் இந்த கிரிவல பாதையை நடந்தே சுற்றி வருவதற்கு மூன்று மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகலாம்.
ரமணா ஆசிரமம்:
- திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஒரு சிறப்பு வாய்ந்த ஆசிரமம் ரமண ஆசிரமம். இந்த ரமணா ஆசிரமத்தில் தினமும் காலை உணவு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
- திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரசு கலை கல்லூரிக்கு செல்லும் வழியில் ரமணா ஆசிரமம் அமைந்துள்ளது.
- இந்த ரமணா ஆசிரமம் ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்து வருகிறது.
- இந்த ஆசிரமத்தில் தியானம் மற்றும் அமைதி போன்றவை அதிகமாக இருக்கும்.
- நீங்கள் உங்களுடைய மன அமைதி வேண்டுமென்றால் இந்த ஆசிரமத்திற்கு சென்று வாருங்கள்.
- மேலும் இது ஒரு ஆன்மீக நூலகமாக உள்ளது. இங்கு இங்கு செல்பவர்கள் உங்களுடைய மனதிற்கு மிகவும் ஏற்ற சூழல் அங்கு இருக்கின்றன.
விருபாஷா குகை:
- இந்த விருபாஷா குகையானது ஒரு ரமணர் தியானம் செய்த இடம் என கருதப்படுகிறது.
- இங்கு செல்பவர்கள் புதிய அனுபவத்தை பெற்ற வருவீர்கள்.
- எனவே இந்த குகைக்கு நீங்கள் திருவண்ணாமலையில் வந்தால் ஒரு தடவையாவது சென்று வாருங்கள்.
ஸ்கந்தாஷ்ரமம்:
- இந்த இடம் மனது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- இங்கு செல்பவர்கள் மழையின் மேல் அமைந்த ஒரு இடத்தை பார்ப்பீர்கள்.
- இந்த இடம் ஆனது ஒரு அமைதியான தியானம் செய்யக்கூடிய இடமாகும்
- இங்கு நீங்கள் உங்களுடைய மன அமைதிக்காக சென்று வரலாம்.
இயற்கை வளங்கள்:
திருவண்ணாமலை:
- இந்த மலையானது கிரிவலம் சுற்றுவதற்கு ஒரு ஏற்ற இடம் ஆகும்.
- இது கிரிவலம் செய்ய ஒரு புனித மலை என்று போற்றப்படுகிறது.
சாத்தனூர் அணை:
- இந்த சாத்தனூர் அணையானது திருவண்ணாமலையில் அமைந்துள்ளது
- இந்த பகுதியில் முதலைப்பண்ணை பூங்கா போன்றவற்றை காணலாம்.
- நீங்கள் இங்கு சென்றார் அங்குள்ள நீர் நிலையை காணலாம். உங்களுடைய சுற்றுலா பயணத்தை இங்கு சென்றும் ஒரு அனுபவம் பெறலாம்.
- இந்த சாத்தனூர் அணையானது திருவண்ணாமலையில் உள்ள ஒரு பெரிய அணையாகும்.
பீமன் நீர்வீழ்ச்சி:
- இந்த பீமன் நீர்வீழ்ச்சியானது திருவண்ணாமலையில் உள்ள ஜமுனாமரத்தூரில் அமைந்துள்ளது.
- இந்த ஜமுன மருத்துவர் ஆனது மொத்தமாக இயற்கை வளங்கள் நிறைந்த மூலிகை தாவரங்கள் நிறைந்த ஒரு அழகான வனப்பகுதியாகும்.
- இங்கு அதிக அளவில் மூலிகை மரங்கள் இருக்கின்றன. இந்த பகுதியில் தான் பீமன் நீர்வீழ்ச்சியானது அமைந்துள்ளது.
- இந்த நீர்வீழ்ச்சியானது இயற்கையாகவே அமைந்த ஒரு அற்புதமான இடமாகும். இந்த நீரானது அதிக அளவு மருத்துவ குணம் உடையதாக இருக்கும்.
ஜவ்வாது மலை:
- இந்த ஜவ்வாது மலை ஆனது அதிகளவில் மூலிகை தாவரங்களை கொண்ட ஒரு மலைப்பகுதியாகும்.
- இங்கு அதிக அளவில் பலா பழம் தேன் சீதாப்பழம் போன்றவை இயற்கையாகவே அதிக அளவில் இருக்கிறது.
- இங்கு செல்பவர்கள் இயற்கையாகவே அனைத்தையும் வாங்கிக் கொண்டு வரவும். இங்கு மிகவும் குறைந்த விலையில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.
- உடலுக்கு அதிக சக்தி அளிக்கக்கூடிய அனைத்து இயற்கை உணவுகளும் இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
- எனவே நீங்கள் சென்றால் உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் ஜவ்வாது மலையில் இருந்து வாங்கிக் கொண்டு வரலாம்.
கோமுட்டேரி ஏரி:
- இந்த ஏரியானது அதிகமாக நீர் தேங்கி இருக்கக்கூடிய ஒரு பகுதியாகும்.
- நீங்கள் படகு சவாரி செய்ய வேண்டும் என்றால் இந்த இடமானது உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
- எனவே நீங்கள் இந்த இடத்திற்கும் சென்று வரலாம்.
ஜவ்வாது மலை குள்ளர் குகை :
கலாச்சார இடங்கள்:
1) தவளகிரீஸ்வரர் கோவில் :
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியில் ஆயிரம் அடிக்கு மேல் உயரமுடைய வெண்குன்றம் மலையில் அமைந்துள்ளது இந்த தவளகிரிஸ்வரர் கோவில்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பருவதமலைக்கு அடுத்தபடியாக மக்கள் செல்லும் மற்றொரு சுற்றுலாத்தலமாக இந்த வெண்குன்றம்மலை உள்ளது.
2) திருமலை சமணர் கோவில்:
- இந்தக் கோயிலில் பழமை வாய்ந்த இயற்கை ஓவியங்கள் காணப்படுகின்றன.
- மேலும் இந்த கோயில் ஆனது 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.
- இங்குள்ள சிலைகள் அனைத்தும் மிகவும் பழமை வாய்ந்த சிற்பங்கள் ஆகும்.
- இங்குள்ள அனைத்தும் மிகவும் பழமை வாய்ந்த பொருள்கள் ஆகும்.
தேவிகாபுரம் பெரியநாயகி கோயில்:
- தேவிகாபுரம் கோயில் ஆனது மிகவும் பழமை வாய்ந்த கோவில். தேவிகாபுரத்தில் வரும் புகழ்பெற்ற கோவிலாக இந்த கோவில் உள்ளது.
- இந்தக் கோயிலில் உள்ள விஜயநகர கட்டிடக்கலை ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கட்டிடக்கலை ஆகும்.
படவேடு ரேணுகாம்பாள் கோயில்:
- இந்த கோயில் ஆனது வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட ஒரு கோயிலாகும்.
- திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
- இங்குள்ள சுயம்பு அம்மன் ஆனது அனைவராலும் வழங்கக்கூடிய ஒரு தெய்வமாகும். நீங்கள் இதனை காண படவேடு சென்று தரிசனம் செய்யலாம்.
- மேலும் திருவண்ணாமலையில் பல்வேறு இடங்கள் இருக்கின்றன நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்தால் இந்த அனைத்து இடத்தையும் சுற்றி பார்ப்பதற்கு உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் நிறைய அனுபவம் வாய்ந்த பயணம் ஆகும் இந்த பயணம் உங்களுக்கு அமையும்.